அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் கல்லூரி பருவத்தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. சென்னை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், நிகழாண்டு செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்விகள் மாணவர்கள் மத்தியில் எழுந்தன. இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் தொடங்கும் போது, கல்வி ஆண்டின் தொடக்கத்தில் கல்லூரி பருவத்தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளுக்கும், இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய …
சிவப்பு மண்டல பகுதிகளில் தற்போதைய ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து இருக்கும்- முதல்வர் பழனிசாமி
சிவப்பு மண்டல பகுதிகளில் தற்போதைய ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து இருக்கும் என்று முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். சென்னை, சென்னை தலைமைச்செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ அரசின் சிறப்பான பணிகளை எதிர்கட்சிகள் திட்டமிட்டு தவறாக விமர்சனம் செய்கின்றன. மத்திய அரசிடம் தேவையான நிதியை கேட்டுள்ளோம். எதிர்கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசிடம் தமிழகத்திற்கான நிதியை கேட்கவில்லை. நோயை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது. வெளிமாநிலத்தில் இருந்தும், …
தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது: முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். சென்னை, தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் பழனிசாமி தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி …
ஊரடங்கில் மக்களுக்கு உதவ அரசியல் கட்சிகள், தன்னார்வலர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனையுடன் அனுமதி
ஊரடங்கில் மக்களுக்கு உதவ அரசியல் கட்சிகள், தன்னார்வலர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் உணவு, அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்காமல் சிரமத்துக்கு ஆளானவர்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், தனிநபர்கள் உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், பொதுமக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்புகள் நேரடியாக வழங்கக்கூடாது. மாநகரங்களில் மாநகராட்சி கமிஷனர்கள், மாவட்டங்களில் …
சீனாவில் கொரோனாவுக்கு பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் எதனால் இறந்தார்கள்? அதிர்ச்சி தகவல்
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் சரியான செயற்கை சுவாச கருவி வசதி கிடைக்காமல் இறந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. பெய்ஜிங் உலகையே இப்போது அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் பரவியது. ஆனால் தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் முற்றிலும் குறைந்து உள்ளது. அங்கு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். சீனாவில் மட்டும் இந்த கொரோனா வைரஸால் 81,953 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3,339 பேர் …
கொரோனா வைரஸின் முழு மரபணுவையும் வரிசைப்படுத்துவதில் இந்திய விஞ்ஞானிகள் வெற்றி
கொரோனா வைரஸின் முழு மரபணுவையும் வரிசைப்படுத்துவதில் குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் வெற்றி கண்டு உள்ளனர். அகமதாபாத் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று 12,380 ஆக உயர்ந்தூள்ளது. இறப்பு எண்ணிக்கை 414 ஐ எட்டியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இந்தியாவில் திருப்புமுனையாக குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் (ஜிபிஆர்சி) விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் முழு மரபணுவையும் வரிசைப்படுத்துவதில் வெற்றி கண்டு உள்ளனர். குஜராத்தின் முதல் மந்திரி …
மத்திய கிழக்கு நாடுகளில் தவிக்கும் இந்திய தொழிலாளர்களை மீட்க ராகுல் காந்தி கோரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் தவிக்கும் இந்திய தொழிலாளர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் தொழில்கள் முடக்கத்தால் ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். நாடு திரும்ப விரும்பும் அவர்கள், விமானங்கள் ரத்தால் வர முடியவில்லை. ஆகவே, மத்திய அரசு …
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 3081 ஆக உயர்வு- மும்பையில் மேலும் 107 பேருக்கு பாதிப்பு
மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3081 ஆக உயர்ந்துள்ளது. மும்பை: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 …
டெல்லியில் பீசா டெலிவரி பாய்க்கு கொரோனா… தனிமைப்படுத்தப்பட்ட 72 குடும்பங்கள்
டெல்லியில் பீசா டெலிவரி செய்த வாலிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், அவர் டெலிவரி செய்த 72 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. புதுடெல்லி: டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள மால்வியா நகர் பகுதியில் பீசா டெலிவரி செய்யும் 19 வயது வாலிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக அவருக்கு லேசான அறிகுறிகள் இருந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஏப்ரல் 14ம்தேதி நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருடன் டெலிவரி …
ஊரடங்கு: சிறப்பு ரயில்கள் மூலம் 20,474 டன் சரக்கு போக்குவரத்து
கடந்த மாதம் 25-ஆம் தேதி தேசிய ஊரடங்கு தொடங்கியதிலிருந்து இதுவரை 20,474 டன் அளவிலான அத்தியாவசியப் பொருள்கள் சிறப்பு ரயில்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரயில்வேக்கு ரூ.7.54 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுதொடா்பாக ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையில் ரயில்வேயும் பங்காற்றி வருகிறது. அதன்படி, அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்வதற்காக சிறப்பு பாா்சல் …