“இந்திய-அமெரிக்க உறவுகள் இன்னும் வலுவடையும் என்று நம்புகிறேன்” – கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுடெல்லி, அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், அதன் இறுதி பெரும்பான்மை முடிவுகள் இன்று தெரிய வந்துள்ளன. அதன்படி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளும், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளும் பெற்றுள்ளனர். …

ரெயில், விமான சேவை மீண்டும் எப்போது தொடங்கும்? – மத்திய மந்திரி விளக்கம்

ரெயில், விமான சேவை மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார். புதுடெல்லி, நாடு முழுவதும் ஊரடங்கு மே 3-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு பயணம் செய்ய ரெயில்வே நிர்வாகம் முன்பதிவை அனுமதிக்கவில்லை. ஆனால், ஏர் இந்தியா உள்ளிட்ட சில விமான நிறுவனங்கள், மே 4-ந் தேதி முதல், சில குறிப்பிட்ட உள்நாட்டு வழித்தடங்களில் பயணம் செய்ய முன்பதிவை அனுமதித்துள்ளன. இதனால், ரெயில், விமான சேவை மீண்டும் தொடங்குவது …

மத்திய அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் இன்று முதல் பணிக்கு திரும்புகிறார்கள்

மத்திய அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் இன்று முதல் பணிக்கு திரும்புகிறார்கள். புதுடெல்லி, கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் மத்திய அரசின் அனைத்து துறைகளைச் சேர்ந்த அலுவலகங்களும் குறைந்த அளவு ஊழியர்களை கொண்டே செயல்படுகின்றன. பெரும்பாலான அதிகாரிகள் வீடுகளில் இருந்தே தங்கள் பணிகளை மேற்கொள்கிறார்கள். மத்திய அரசு துறைகளின் இணைச் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள், சிறப்பு செயலாளர்கள் மற்றும் செயலாளர்கள் கடந்த 13-ந்தேதி முதல் தங்கள் …

எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்க படைகள் தயார் – ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பரபரப்பு பேட்டி

கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நெருக்கடி, கண்ணுக்கு தெரியாத மிகப்பெரிய போர், எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்க ஆயுதப்படைகள் தயார் நிலையில் உள்ளன என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார். புதுடெல்லி, மும்பையில் கடற்படை வீரர் கள் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்து உள்ளது என்ற தகவல் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தருணத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- …

டெல்லியில் ஊரடங்கு தளர்வு கிடையாது – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் ஊரடங்கு தளர்வு கிடையாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். புதுடெல்லி, சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று தளர்த்தப்படும் நிலையில், டெல்லியில் எந்த தளர்வும் கிடையாது என்று அந்த மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- நாட்டின் மக்கள் தொகையில் 2 சதவீதம் பேர் தான் டெல்லியில் வசிக்கின்றனர். ஆனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 12 சதவீதம், டெல்லியில் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்போதைக்கு ஊரடங்கில் எந்த தளர்வும் கிடையாது. வருகிற 27-ந் …

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மின்னணு சாதனங்களை விற்க மத்திய அரசு தடை

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மின்னணு சாதனங்கள் போன்ற அத்தியாவசியமற்ற பொருட்களை விற்க மத்திய அரசு தடை விதித்து உள்ளது. புதுடெல்லி, நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் உணவுப் பொருட்கள், மருந்து, மருத்துவ சாதனங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கி மத்திய அரசு கடந்த 14-ந் தேதி உத்தரவிட்டது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு …

மத்திய அரசு அறிவித்த சலுகைகளை பெற வருமானவரி படிவங்களில் திருத்தம்

மத்திய அரசு அறிவித்த காலநீட்டிப்பு சலுகைகளை பெறுவதற்காக வருமானவரி படிவங்களில் திருத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. புதுடெல்லி, பொதுவாக, வருமான வரி படிவங்கள், ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். ஆனால், இந்த ஆண்டு ஜனவரி 3-ந்தேதியே வெளியிடப்பட்டு விட்டன. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு காரணமாக, வருமானவரி தாக்கல் செய்பவர்களுக்கு மத்திய அரசு சில காலநீட்டிப்பு சலுகைகள் அறிவித்தது. அதன்படி, 80சி (எல்.ஐ.சி., தேசிய சிறுசேமிப்பு பத்திரம், பொது வைப்புநிதி போன்றவை), 80டி (மெடிகிளைம்), 80ஜி …

2020-21ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் படிவங்களை திருத்தி அமைக்க அரசு முடிவு

2020-21ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் படிவங்களை திருத்தி அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக நேரடி வரிகள் விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ் தொற்று தற்போது வேகமாக பரவி வருவதால், வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் மார்ச் 31-ம் தேதியில் இருந்து ஜூன் 30-ம் தேதி ஆக நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரை மேற்கொள்ளப்படும் வரிசலுகைக்கான முதலீடுகள் மற்றும் பரிவர்த்தனைகளை …

கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உதவிய இந்தியாவுக்கு பாராட்டு

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உதவி புரிந்து வரும் இந்தியா போன்ற நாடுகளுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தாா் ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியா குட்டெரெஸ். குறிப்பாக, ‘கொவைட்-19’க்கு எதிராக சிகிச்சையளிக்கும் வகையில் அமெரிக்காவுக்கு தேவையான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளையும், அந்நாட்டுக்கு தேவையான உணவுப்பொருள்களை இந்தியா அனுப்பி வைத்தது. இதற்காக இந்தியா மருந்துபொருள்கள் ஏற்றுமதி மீது விதித்திருந்த தடையை விலக்கிக் கொண்டது. இதனிடையே, கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான இந்த போராட்டத்தில் உலகளாவிய ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என ஐ.நா. …

கொரோனா தொற்றை எளிதில் கண்டறியலாம்: நவீன கருவி மூலம் சோதனை தொடங்கியது – 25 நிமிடங்களில் முடிவு தெரியும்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன கருவி மூலம், கொரோனா தொற்றை கண்டறியும் சோதனை சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த சோதனையின் முடிவு 25 நிமிடங்களில் தெரிந்துவிடும். சென்னை, இந்தியாவில் கொரோனா நோய் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஏற்கனவே உள்ள பரிசோதனை முறை மூலம், ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா? என்பதை கண்டறிவதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. இதனால் விரைவாக சோதனை நடத்தி முடிவை கண்டறிய உதவும் …