நோயில் கூட தி.மு.க. அரசியல் செய்வது வேதனை அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பேட்டி அளித்த போது, அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பு இருக்கிறது. ஆனால், தேவையான நிதியை கேட்டுப்பெறவில்லை என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து இருக்கிறாரே? பதில்:- அவர்கள் ஆட்சிக் காலத்தில் மத்தியில் இருந்து எவ்வளவு நிதி வழங்கினார்கள் என்று சொல்ல …
தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு கொண்ட ‘சிவப்பு பகுதி’ மாவட்டங்கள் 25 ஆக உயர்வு
தமிழகத்தில், அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு கொண்ட ‘சிவப்பு பகுதி’ மாவட்டங்களின் எண்ணிக்கை நேற்று 25 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் கடந்த 1-ந்தேதி முதல் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் கொரோனா வைரசால் 22 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட(ஹாட்ஸ்பாட்) மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியல், 15 …
20-ந் தேதி முதல் சில தொழில் நடவடிக்கைகளுக்கு அனுமதி: மத்திய அரசின் திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறை பின்பற்றப்படும் – தமிழக அரசு உத்தரவு
சில தொழில் நடவடிக்கைகளுக்கு 20-ந் தேதியில் இருந்து அனுமதி அளித்து மத்திய அரசு வெளியிட்ட திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா தொற்று தொடர்பான ஊரடங்கை மே 3-ந் தேதிவரை நீட்டித்ததோடு, சில தொழில்களுக்கான கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் செய்து வழிகாட்டி நெறிமுறைகளை கொண்டு வந்து மத்திய அரசு உத்தரவிட்டது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் …
ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் – டி.ஜி.பி. திரிபாதி அறிவிப்பு
ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சென்னை, கடந்த 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையின் போது, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் திரும்ப பெற்று கொள்ளலாம். வாகன உரிமையாளர்களிடம் தினசரி காலை 7 மணி முதல், பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, 30 நிமிடங்களுக்கு ஒரு முறை 10 நபர்களுக்கு …
ஊரடங்கால் ஆட்டோவில் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு: வயதான தந்தையை 1 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற மகன்
ஊரடங்கால் ஆட்டோவில் செல்ல போலீசார் அனுமதிக்காததால், வயதான தந்தையை 1 கி.மீ. தூரம் மகன் தோளில் சுமந்து சென்ற உருக்கமான சம்பவம் கேரளாவில் நடந்து உள்ளது. கொல்லம், கொரோனா நோய்க்கிருமி பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் வருகிற மே 3-ந் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கின் காரணமாக நோய்க்கிருமி வேகமாக பரவுவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. என்றாலும் சில சந்தர்ப்பங்களில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் கேரளாவில் நடந்து …
இந்தியாவில் கொரோனா 420 பேரின் உயிரை பறித்தது: 5 மாநிலங்களில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு
இந்தியாவில் 5 மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் நாட்டில் 420 பேரின் உயிரை இந்த வைரஸ் காவு வாங்கி இருக்கிறது. புதுடெல்லி, இந்தியாவில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், கொரோனா தனது வேலையை காட்டி கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே மராட்டியம், டெல்லி மற்றும் தமிழகத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் மத்திய பிரதேசமும், ராஜஸ்தானும் இணைந்துள்ளன. …
40 நாட்கள் ஊரடங்கு; விமானங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும் – மத்திய அரசு உத்தரவு
மார்ச் 25-ந் தேதி முதல் மே மாதம் 3-ந் தேதி வரை விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்து இருந்தவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் கடந்த 14-ந்தேதி வரையும், 15-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரையும் என 2 கட்டங்களாக 40 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கையொட்டி அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களும் …
53 நாடுகளில் 3,300 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு
53 நாடுகளில் 3,300 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுடெல்லி, உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் 53 உலக நாடுகளில் 3,336 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. வெளிநாடுகளில் கொரோனா வைரசுக்கு 25 இந்தியர்கள் பலியாகியும் உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பெரிய அளவில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க முடியாத சூழல் உள்ளது; எனவே அவர்கள் …
325 மாவட்டங்களில் கொரோனா இல்லை
புதுடில்லி: இந்தியாவில் 325 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டில்லியில் நிருபர்களை சந்தித்த சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் கூறியதாவது: இந்தியாவில் 325 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. உலக சுகாதார அமைப்பினருடன் நேற்று சுகாதார அமைச்சர், இணையமைச்சர் ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம், கொரோனா தடுப்பு மற்றும் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். புதுச்சேரியின் மாஹேயில் கடந்த 28 நாட்களாக கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் இல்லை. …
சென்னை பெருநகர மாநகராட்சியில், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக
சென்னை பெருநகர மாநகராட்சியில், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக விவரம் வருமாறு சென்னை சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 214 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, உறுதி செய்யப்பட்ட நபர்கள் சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற மண்டலம் வாரியான விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 64 பேரும், திருவிக நகரில் 31 பேரும், கோடம்பாக்கத்தில் 24 பேரும், …