இந்தியாவில் பொது மக்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள், டேட்டா உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு முழுக்க அன்லிமிட்டெட் அழைப்புகள், டேட்டா இலவசமாக வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்சமயம் அது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் மே 3 ஆம் தேதி வரை பொது மக்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா, டிடிஹெச் போன்றவை இலவசமாக வழங்க மத்திய அரசு உத்தரவிட …
விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது – முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம், விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் பழனிசாமி மேலும் கூறியதாவது:- “ சேலம் மாவட்டத்தில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . சேலம் மாவட்டத்தில் 9 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. …
விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் உதவும்- பிரதமர் மோடி
விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு மத்திய அரசு பல்வேறு நிவாரணங்களை வழங்கி வருகின்றன. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறும்பொழுது, வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ரிசர்வ் வங்கி உறுதி …
ஏப்ரல் 20-ந்தேதிக்கு பிறகு இயங்க மேலும் பல சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதி
ஏப்ரல் 20-ந்தேதிக்கு பிறகு இயங்க மேலும் பல சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதுடெல்லி கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கின் போது எந்தெந்த சேவைகள் கிடைக்கும்? எவை கிடைக்காது என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. அதே சமயம் ஏப்ரல் 20-க்கு பிறகு சில கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி அனைத்து வித விவசாய …
2021-22ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும்; ரிசர்வ் வங்கி ஆளுநர்
2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார். மும்பை, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு மத்திய அரசு பல்வேறு நிவாரணங்களை வழங்கி வருகின்றன. இதேபோல் தொழில் துறையினருக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் பல்வேறு சலுகைகளை அறிவித்தார். குறிப்பாக கடன் வசூலிக்க தடை, வட்டி …
டெல்லி தப்லீக் ஜமாத் தலைவர் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு
டெல்லி தப்லீக் ஜமாத் தலைவர் மீது பண மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு தாக்கல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுடெல்லி டெல்லியின் நிஜாமுதீனில் கடந்த மாதம் தப்லீக் ஜமாத் கூட்டத்தை நடத்தியதற்காக அதன் தலைவர் மவுலானா சாத் காந்தல்வி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது அமலாக்க இயக்குநரகம் அவர் மீது பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டி உள்ளது. மவுலானா சாத் மற்றும் ஜமாத் மற்றும் பிறருடன் தொடர்புடைய …
ஏப்.,20 முதல் ‘ஆன்லைன்’ மூலம் ‘டிவி, பிரிஜ்’ பொருட்களை வாங்கலாம்’
புதுடில்லி: ‘ஏப்., 20ம் தேதியில்இருந்து, ‘அமேசான், பிளிப்கார்ட்’ உள்ளிட்ட, ‘ஆன்லைன்’ சேவை நிறுவனங்கள் வாயிலாக, மொபைல் போன், ‘டிவி, பிரிஜ்’ போன்ற பொருட்களை வாங்கலாம்’ என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, இரண்டாவது முறையாக, அடுத்த மாதம், 3ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும், ஏப்., 20ல் இருந்து, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில பணிகளை …
ஏப்.,20க்கு பின் கேரளாவில் புதிய வாகன கட்டுப்பாடுகள்: பினராயி விஜயன்
திருவனந்தபுரம்: வரும் ஏப்.,20ம் தேதிக்கு பிறகு, கேரளாவில் ஓரளவு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களுக்கான ‛ஒற்றை – இரட்டைப்படை’ முறை அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை அடுத்து, ஏப்.,20ம் தேதிக்கு பின்னர் சில தளர்வுகளையும் அதற்கான வழிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. இந்நிலையில், கேரளா மாநிலத்தில் 4 மண்டலமாக பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்றவாறு தளர்வு பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாகனக் கட்டுப்பாடுகளுக்கான …
கரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் 6 இந்திய நிறுவனங்கள்
புது தில்லி: கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் 6 இந்திய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. உலக நாடுகளில் ஆயிரக்கணக்கில் உயிர்ச்சேதம் ஏற்படுத்தி, அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா என்ற உயிர்க்கொல்லி நோய்த்தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மலேரியா எதிர்ப்பு மருந்து, ஹெச்ஐவி நோயாளிகளுக்கு தரப்படும் மருந்துகள் ஆகியவற்றையே கரோனா நோயாளிகளுக்கு கொடுத்து பல்வேறு நாடுகள் நிலைமையை சமாளித்து வருகின்றன. இந்நிலையில் கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் 6 நிறுவனங்கள், …
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி கலெக்டர்களுடன் ஆலோசனை; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைகிறது – எடப்பாடி பழனிசாமி பேட்டி
நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தெரிவித்தார். சென்னை, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். …