ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறைந்து இருப்பதாக மத்திய அரசு அதிகாரி தெரிவித்தார். ஊரடங்கின் காரணமாக இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறைந்தது – மத்திய அரசு அதிகாரி தகவல் புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது நம் நாட்டில் கொரோனா பாதிப்பும், உயிர் இழப்பும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் …
பள்ளி கட்டணம் செலுத்துவது, ஆசிரியர்களுக்கு சம்பளம் எப்போது? – மாநில அரசுகள் முடிவு எடுக்க சி.பி.எஸ்.இ. வேண்டுகோள்
சி.பி.எஸ்.இ. பள்ளி கட்டணம் செலுத்துவது, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது எப்போது என்பது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்குமாறு சி.பி.எஸ்.இ. வேண்டுகோள் விடுத்துள்ளது. பள்ளி கட்டணம் செலுத்துவது, ஆசிரியர்களுக்கு சம்பளம் எப்போது? – மாநில அரசுகள் முடிவு எடுக்க சி.பி.எஸ்.இ. வேண்டுகோள் புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பள்ளிகள் செயல்படவில்லை. இருப்பினும், கல்வி கட்டணத்தை செலுத்துமாறு சில சி.பி.எஸ்.இ. பள்ளிகள், பெற்றோரை வற்புறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. …
கல்வி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தனியார் பள்ளிகளுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள்
தனியார் பள்ளிக் கூடங்கள் ஆண்டு கல்வி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங் கேட்டுக்கொண்டுள்ளார். கல்வி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தனியார் பள்ளிகளுக்கு மத்திய மந்திரி வேண்டுகோள் புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொழில், வர்த்தகம், விவசாயம் என பல துறைகளும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. இந்த நெருக்கடியான காலகட்டத்தில், தனியார் பள்ளிக் …
சென்னையில் அவசர கால மருத்துவத் தேவைகளுக்கு இலவச காா் வசதி
முதியோா், கா்ப்பிணிகள், நோயாளிகளின் அவசர கால மருத்துவத் தேவைகளுக்காக சென்னையில் ‘அலைட்’ என்ற பெயரில் இலவச காா் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை மகேந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து வழங்கி வருகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை. மருத்துவம், காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைத் தவிர பிற காரணங்களுக்காக வெளியே வரக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் …
கரோனா நோய்த்தொற்று எதிா்கொள்வதில்அரசு எந்த வாய்ப்பையும் தவற விடாது: அமித் ஷா
கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் அரசு எந்த வாய்ப்பையும் தவற விடாது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். ருளாதாரத்தை உயா்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்காக ரிசா்வ் வங்கியை பாராட்டிய அவா், இதுபோன்ற நடவடிக்கைகள் மோடியின் கரங்களை மேலும் வலுப்படுத்தும் என்றாா். இதுகுறித்து அமித் ஷா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் மத்திய அரசு சோா்வின்றி உழைத்து வருகிறது. தற்போதைய ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் குறைந்தபட்ச பாதிப்பே …
தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற ரோஹிங்கயாக்களை அடையாளம் காண மத்திய அரசு வலியுறுத்தல்
தில்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பங்கேற்ற ரோஹிங்கயாக்களை அடையாளம் காணுமாறு அந்தந்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், பஞ்சாபில் தேராபாஸி, தில்லி, ஜம்மு ஆகிய பகுதிகளில் ரோஹிங்கயா முஸ்லிம் அகதிகளுக்கான முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் இருந்து, கடந்த மாதம் ஹரியாணா மாநிலம் மேவாத், தில்லி நிஜாமுதீன் ஆகிய இடங்களில் தப்லீக் ஜமாத் சாா்பில் நடைபெற்ற மாநாடுகளில் ரோஹிங்கயாக்கள் …
நபார்டு, தேசிய வீட்டு வசதி வங்கிக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடன் ரிசர்வ் வங்கி வழங்குகிறது
நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் நபார்டு, தேசிய வீட்டு வசதி வங்கி போன்ற மத்திய அரசின் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி ரூ.50 ஆயிரம் கோடி கடன் வழங்குகிறது. மும்பை, கொரோனாவால் உலகில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பல்வேறு நாடுகளின் மைய வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்த நிலையில் ரிசர்வ் வங்கியும் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களை குறைத்தது. அதன்படி ரெப்போ விகிதம் 4.40 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ …
கொரோனா தடுப்பு நடவடிக்கை: மதுரை சித்திரை திருவிழா ரத்து – மே 4-ந் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும்
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு உள்ளது. மே 4-ந் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் என்றும், ஆனால் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுரை, தமிழகத்தில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாக்களில் முக்கியமானது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா. இந்த விழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் மதுரைக்கு வருவார்கள். இதனால் சித்திரை திருவிழா நாட்களில் மதுரை மாநகரம் …
“மு.க.ஸ்டாலினுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது” – சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
“மு.க.ஸ்டாலினுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது” என்றும், “எந்தெந்த தொழிற்சாலைகளை திறப்பது என 20-ந் தேதி அறிவிக்கப்படும்” என்றும் சேலத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் சென்றார். சேலம் மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் கிர்லோஸ்குமார், மஞ்சுநாதா, சேலம் மாவட்ட கலெக்டர் ராமன், …
சமூக இடைவெளியை மறந்தனர் கோயம்பேடு மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம் – இன்று முதல் பொதுமக்களுக்கு தடை
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் சமூக இடைவெளியை மறந்து அலைமோதினர். இதனால் இன்று முதல் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காய்கறிகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்கள் காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்படவில்லை. மாறாக, தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் …