தேவைகள் குறையும் என்பதால் நாட்டின் வளர்ச்சியும் குறையும்

புதுடில்லி : வரவிருக்கும் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 3.5 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது, எஸ் அண்டு பி குளோபல்ரேட்டிங்ஸ் நிறுவனம். இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அடுத்த நிதியாண்டில், நாட்டின் வளர்ச்சி, 3.5 சதவீதமாக இருக்கும். இதற்கு முன், 5.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், கடன் தகுதியானது சரியும் என, எதிர்பார்க்கப்படுவதுதான். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இந்தியாவில் தேவைகள் குறைந்து, …