டெல்லி நிஜாமுதீன் மவுலானா மீது வழக்கு; வெளிநாட்டினர் விசாவை கருப்புப் பட்டியலில் வைக்க திட்டம்

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மத வழிபாடு மாநாடு நடத்தி கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்த நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாத்தின் தலைமையகமான அலமி மார்க்காஸ் பங்களேவாலி மஸ்ஜித்தில் இந்த மாத தொடக்கத்தில் நாடு முழுவதும் இருந்து சுமார் 8,000 பேர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேசியா, இந்தோனேசியா, சவுதி அரேபியா மற்றும் கிர்கிஸ்தான் உள்ளிட்ட …

டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 ஆயிரம் பேரில் 300 பேருக்கு கொரோனா அறிகுறி… அதிர்ச்சி தகவல்

டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2 ஆயிரம் பேரில் 300 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. புதுடெல்லி மலேசியா, இந்தோனேசியா, சவுதி அரேபியா மற்றும் கிர்கிஸ்தான் உள்ளிட்ட 2,000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மார்ச் நடுப்பகுதியில் ஒரு முஸ்லீம் மத அமைப்பான தப்லீ-இ-ஜமாத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மார்ச் 24 அன்று 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தாலும், இந்த காலகட்டத்திற்குப் பிறகும் 1,400 பேர் ஜமாஅத்தின் …

காலாவதியான டிரைவிங் லைசன்ஸ் ஜூன் 30 வரை செல்லும்

புதுடில்லி: பிப்.,01ம் தேதிக்கு பின்னர் காலாவதியான டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட பிற மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்க ஜூன்.30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. இதனையடுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டன. அரசு போக்குவரத்து அலுவலகங்களும் மூடப்பட்டதால், மோட்டார் வாகனங்களின் ஆவணங்களை புதுப்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. டிரைவிங் …

‘கொரோனா’வால் இந்திய, சீன பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாது: ஐ.நா அறிக்கை

புதுடில்லி: கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலக பொருளாதாரம் இந்த ஆண்டு மந்தநிலைக்குச் செல்லும் எனவும் இந்தியா மற்றும் சீனாவைத் தவிர வளரும் நாடுகளுக்கு, இது கடுமையான சிக்கலைக் கொடுக்கும் எனவும் ஐ.நா.வின் சமீபத்திய வர்த்தக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் இவ்வறிக்கையால், இந்திய பங்குச் சந்தைகள் இன்று (மார்ச் 31) ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின. கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகின் 200 நாடுகளை பரவியுள்ளது. உலகளவில் 1.6 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். …

வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது; தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனாவால் ஊரடங்கு, தொழில்கள், கல்வி நிறுவனங்கள் மூடல் காரணமாக, தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்களிடம், மார்ச் மாதத்திற்கான ஒரு மாத வாடகையை வசூலிக்க வேண்டாம் என தமிழக அரசு, வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. வீட்டு வாடகை கேட்டு யாரும் தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவால் தமிழகத்தில் 74பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு, தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. வருமானம் இன்றி தவிக்கும் தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு , அரசு உத்தரவிட்டடுள்ள …

விவசாய பணிக்கான தடை நீக்கம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’ – தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை, கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அத்தியாவசிய தேவைகளான மளிகை, காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், விவசாய பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக …

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறத்தொடங்கியது?

நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 1190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 100 பேர் குணமடைந்துள்ள நிலையில் தற்போது 971 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மராட்டியத்தில் 200 பேருக்கு மேல் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு நேற்று ஏற்பட்டது. மராட்டியத்தில் …

கொரோனா எதிரொலி; 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு உயர்த்தப்படுவர்: டெல்லி துணை முதல் மந்திரி

கொரோனா எதிரொலியாக டெல்லியில் நர்சரி முதல் 8ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளி மாணவ மாணவியர் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நேரடியாக அடுத்த வகுப்புக்கு சென்று விடுவார்கள். புதுடெல்லி, நாடு முழுவதும் கொரோனா அச்சம் சூழ்ந்த நிலையில், டெல்லியில் அனைத்து பள்ளிகளும் கடந்த 23ந்தேதி முதல் மூடும்படி முதல் மந்திரி கெஜ்ரிவால் உத்தரவிட்டார். இதனை அடுத்து மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. …

ஏப்.2 முதல் நிவாரணத் தொகை, ரேஷன் பொருள்கள்: அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன்

திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல், அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை மற்றும் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என்.நடராஜன். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண உதவித் தொகை வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது: நியாயவிலைக் கடைகளில் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் முதல்வா் அறிவித்துள்ள ரூ.1000 உதவித் தொகை, அரிசி, பருப்பு, …

‘கொரோனாவை விட கொடியது தொழிலாளர்களின் இடப்பெயர்வு:’ நீதிமன்றம் எச்சரிக்கை

புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்று, ஒட்டுமொத்த உலகையும் அச்சத்தின் பிடியில் வைத்துள்ளது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் முதல், புதிது புதிதாக பல்வேறு பிரச்னைகள் தோன்றி வருகின்றன. இவற்றில் மாபெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது தொழிலாளர்களின் இடப் பெயர்வுதான். ஊரடங்கு உத்தரவால், இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். குறிப்பாக, புதுடில்லியில் தங்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்த உத்தரபிரதேசம், …