கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உறவின் முறை சங்கங்கள் உதவ வேண்டும் S.A .சுபாஷ் பண்ணையார் வேண்டுகோள்.   

  நாடார் சங்கங்கள் நமது   சமுதாய மக்களின்   வளர்ச்சிக்காகயும்,  சமுதாயத்தை மேம்படுத்தி   மக்களின் நலன்களை பாதுகாப்பதற்கு  உருவாக்கிய நமது முன்னோர்கள் சமுதாய மக்களுக்காக  பல வழிகாட்டுதலை வகுத்து தந்திருக்கிறார்கள் அதன் அடிப்படையில் இன்று சங்கம் பல பிரச்சனைகளில் மக்களுக்கு பல வழிகளில் உதவி வருகிறது.  இன்று கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்   மக்கள்  பல பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றனர்.  பனை தொழிலாளர்கள் மற்றும்  தின கூலித்தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது  பாதிக்கப்பட்ட  நமது  மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக அனைத்து பகுதிகளில் உள்ள நமது நாடார் உறவின்முறை சங்கங்கள் …

தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் – விஞ்ஞானிகள்

தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புதுடெல்லி தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் என்று எச்சரித்ததாக மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி) ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனில் (ஜமா) வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கட்டுரையில் எம்ஐடியின் இணை பேராசிரியரும் திரவ இயக்கவியலில் நிபுணருமான லிடியா பவுரவுபியாவால் கூறி உள்ளார். …

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,600ஐ தாண்டியது

புதுடில்லி : இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 39 அதிகரித்துள்ளது. 133 பேர் குணமடைந்துள்ளனர். எஞ்சிய 1,466 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநில வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விபரம்: மாநிலங்கள்-பாதிக்கப்பட்டவர்கள்-உயிரிழந்தவர்கள் மஹாராஷ்டிரா – 302- 9 கேரளா- 241-2 தமிழகம் -124-1 டில்லி- 120-2 உ.பி.,-103-1 கர்நாடகா-101-3 தெலுங்கானா-94-3 ராஜஸ்தான்-93-0 ஆந்திரா-83-0 குஜராத்-74-6 காஷ்மீர்-55-2 ம.பி.,-47-3 ஹரியானா-43-0 பஞ்சாப்-41-3 மே.வங்கம்-26-2 பீஹார்-23-1 லடாக்-13-0 சண்டிகர்-13-0 அந்தமான்-10-0 சத்தீஸ்கர்-9-0 உத்தரகாண்ட்-7-0 …

கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு

சென்னை: மானியமில்லாத கேஸ் சிலிண்டர் சிலிண்டர் விலை தொடர்ந்து 2வது மாதமாக குறைந்துள்ளது. சென்னையில் ரூ.64.50 விலை குறைந்துள்ளது. தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 கேஸ் சிலிண்டர் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன், இந்தியா முழுவதும் தினந்தோறும் 30 லட்சம் சிலிண்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து …

மனித இனத்திற்கு கொரோனோ வைரஸ் எழுதிய கடிதம்

சகோதரர்களே, மனித இனமாகிய நமக்கு இந்த கொரோனோ வைரஸ் எழுதிய கடிதத்தை தயவுசெய்து நிச்சயம் படியுங்கள்:- மனிதர்களுக்கு என் அன்பு மடல்!!! ————————————————————— உங்களை அழிப்பது எப்போதும் என் நோக்கமல்ல, விஞ்ஞானம் வளர்ந்து விட்டது, தொழில் நுட்பம் தலை சிறந்து விளங்குகிறது, மருத்துவம் மகத்தான நிலையை அடைந்து விட்டது, ஆகவே இயற்கையை விட மனித இனமே உயர்ந்தது என்கிற உங்களின் அகந்தையை அழிப்பதே என் நோக்கம் !!! எண்ணற்ற போர் விமானங்களை தயாரித்தீர்கள், எத்தனையோ கண்டம் விட்டு …

அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை முதல் ரூ.1,000 வினியோகம்

அனைத்து அரிசி ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.1,000 ரொக்கப் பணம் நாளை (வியாழக்கிழமை) முதல் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், ஏப்ரல் மாதத்திற்கான சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, எண்ணெய் ஆகியவையும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. சென்னை, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைகளுக்கும் …

10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல்

பொதுத்துறை வங்கிகள், 4 வங்கிகளாக இணைக்கப்படுவது இன்று அமலுக்கு வருகிறது. புதுடெல்லி, வளரும் பொருளாதாரத்தின் தேவைகளை பூர்த்தி செய்யவும், உலக அளவில் பெரிய வங்கிகளாக உருவாக்கவும் பொதுத்துறை வங்கிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை பேங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன. இந்நிலையில், மேலும் 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்த இணைப்பு இன்று (புதன்கிழமை) அமலுக்கு வருகிறது. அதன்படி, இந்தியன் …

மருந்து பொருட்கள் ‛சப்ளை’: ஜி-20 நாடுகள் முடிவு

புதுடில்லி: ஒரு பக்கம், ‘கொரோனா’ வைரஸ், மற்றொரு பக்கம், முழு ஊரடங்கு என, நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தேவைப்படும் நாடுகளுக்கு, ‘சப்ளை’ செய்ய, ஜி – 20 நாடுகள் முன்வந்துள்ளன. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பல்வேறு நாடுகளில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கான விமான சேவை உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன. இதனால், ஏற்றுமதி, இறக்குமதியும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், வைரஸ் பாதிப்பை தடுக்க, பல்வேறு நாடுகளுடன் …

கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை: முதல்வர் இபிஎஸ்

சென்னை: கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம் என முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளார். சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் இ.பி.எஸ்., ஆய்வு செய்தார். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா, உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அங்கு தயார் செய்யப்பட்ட இட்லியை சாப்பிட்டு பார்த்தார். இதன் பின்னர் முதல்வர் இ.பி.எஸ்., நிருபர்களிடம் கூறுகையில், ஏழை, எளிய மக்களுக்காக அம்மா உணவகம் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களால் பாராட்டப்பட்ட, …

பி.எப்., புதிய விதிமுறைபடி இனி பணம் எடுக்கலாம்

புதுடில்லி: திருத்தப்பட்ட புதிய விதிமுறைபடி தொழிலாளர்கள், பி.எப்., கணக்கில் 75 சதவீதம் வரை அல்லது மூன்று மாத அடிப்படை சம்பளம், இவற்றில் எது குறைவோ, அதை, முன்பணமாக எடுத்துக் கொள்ளும் நடைமுறை அமலுக்கு வந்தது. அது தொடர்பாக தொழிலாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், தொழிலாளர்கள், அதிகபட்சமாக மூன்று மாத அடிப்படை ஊதியத்தை பெறுவதற்கு வகை செய்வதற்கான அரசாணையை, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் மார்ச் 30ல் வெளியிட்டது. கடந்த …