சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகளை மூட உத்தரவு

சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளது. மேலும் கொரானா அதிகம் பாதிப்புள்ள பகுதியை வெளியிட்டு உள்ளது. சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகளை மூட உத்தரவு சென்னை மாநகராட்சி சென்னை சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாளை முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை சென்னையில் அனைத்து வகையான இறைச்சிக் கடைகளையும் மூடவேண்டும். உத்தரவை மீறி செயல்படும் இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் …

தமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. இன்று (ஏப்.,03) ஒரே நாளில் மட்டும் 102 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று(ஏப்.,2) வரை 309 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் தேசிய அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருந்தது. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், தமிழகத்தில், 3,684 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் 2,789 பேருக்கு கொரோனா இல்லை. 411 பேருக்கு …

44 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும்: முதல்வர் இ.பி.எஸ்.,

சென்னை: அத்தியாவசியமின்றி மக்கள் வெளியே வந்தால், 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும் என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார். வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாம்களை முதல்வர் இ.பி.எஸ்., ஆய்வு செய்தார். இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதி செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் உள்ள தொழிலாளர்களை சந்தித்தேன். வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்து தமிழகத்தில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை தமிழக அரசு செய்துள்ளது. உணவு,உடை, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் …

டில்லி மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர் விசா ரத்து

புதுடில்லி: டில்லியில், தப்லிக் – இ – ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர்களின் விசா ரத்து செய்யப்பட்டது. டில்லியில், நிஜாமுதீன் பகுதியிலிருக்கும், தப்லிக் – இ – ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில், மார்ச், 8 – 10ம் தேதிகளில், பிரசங்க கூட்டம் நடந்தது. இதில், நம் நாட்டில் இருந்தும், மலேஷியா, வங்கதேசம், இந்தோனேஷியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ‘ஓரிடத்தில் அதிகமானோர் கூடக் கூடாது’ என, டில்லி போலீசார் …

அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை

அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் சண்முக இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை, அனைத்து மதத் தலைவர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா குறித்து மத ரீதியாக கருத்துக்கள் வெளியாவதை தவிர்க்க வேண்டுமென இந்த ஆலோசனையின் போது வலியுறுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது – தூதரக அதிகாரி

நாடு திரும்ப விரும்பும் தனது நாட்டினரை திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளதாக மூத்த அமெரிக்க தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார். வாஷிங்டன் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 30,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் 350 க்கும் மேற்பட்ட விமானங்களில் அமெரிக்கா திரும்பி உள்ளனர் கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பரவுவதைத் தடுக்க இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நிலையில் உள்ள இந்தியாவில் இருந்து, நாடு திரும்ப விரும்பும் தனது நாட்டினரை திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளதாக மூத்த அமெரிக்க தூதர் …

புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர்

புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என தம்பதியினர் பெயரிட்டு உள்ளனர் ராய்ப்பூர் கொரோனா வைரஸால் ஏற்பட்ட தொற்றுநோய் உலகை ஆட்டுவித்து வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனா தொற்றால் ஊரடங்கை அறிவித்து உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா என பெயர் சூட்டி மகிழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சத்தீஸ்காரில் ஒரு தம்பதியினருக்கு இரட்டை குழந்ததைகள் பிறந்தது. அவர்கள் குழந்தைகளுக்கு‘கொரோனா’மற்றும் ‘கோவிட்’என்று பெயரிட்டு உள்ளனர். இருப்பினும், தம்பதியினர் பின்னர் தங்கள் முடிவை மாற்றி …

கொரோனாவுக்கு எதிரான போர் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது ‘அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம்’ – பிரதமர் மோடி வேண்டுகோள்

முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போர் இப்போதுதான் தொடங்கி இருப்பதாகவும், இந்த நோய்க் கிருமியை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டு போராடவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். புதுடெல்லி, மனித குலத்தை அச்சுறுத்தி வரும் கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை ஒழிக்க உலக நாடுகள் போராடிக்கொண்டு இருக்கின்றன. கொரோனா வைரஸ் தாக்கியதில் உலகம் முழுவதும் 47 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நோய்க் …

சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் – ஒன்று கூடி விளக்கு ஏற்ற கூடாது; பிரதமர் மோடி

வரும் ஏப்.5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். புதுடெல்லி, பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியதாவது;- ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. கொரோனாவை எதிர்கொள்வதில் உலகிற்கே இந்தியா முன்மாதிரியாக உள்ளது. வீட்டில் …