ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய மந்திரிகள் குழு ஆலோசனை நடத்தினர். புதுடெல்லி, கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பால் அவதிப்படும் மக்களை நெருக்கடியில் இருந்து மீட்பது பற்றி ஆலோசிக்க, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான மத்திய மந்திரிகள் குழுவின் 5-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. உணவுத்துறை மந்திரி ராம் விலாஸ் பஸ்வான், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், தகவல் மற்றும் …
தொழுநோய் தடுப்பு மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துமா? – இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி
தொழுநோய் தடுப்பு மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துமா? என்பது குறித்து இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள். புதுடெல்லி, உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளன. இந்த தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளைப் போலவே இந்தியாவும் கொரோனா நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளது. தொழுநோயை கட்டுப்படுத்தும் மைக்கோ பாக்டீரியம் என்கிற …
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் – மராட்டிய அரசு அறிவிப்பு
பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் 12 லட்சம் பேருக்குத் தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது. மும்பை, கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே மராட்டிய மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மராட்டிய தலைநகரான மும்பையிலும் கொரோனா வைரசின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. மராட்டிய மாநிலத்தில் மேலும் 328 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டது. …
கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டம் 47 ஆக அதிகரித்துள்ளது – மத்திய சுகாதாரத்துறை
கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் 47 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2015 பேர் மீண்டுள்ளனர். குணம் அடைந்தோர் சதவிகிதம் 13.85 ஆக உள்ளது. அதேபோல், கொரோனோ …
அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அரசின் அனுமதி கட்டாயம்- மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி, கொரோனா தொற்று பரவலால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் இந்திய நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு விற்பனையில் சரிவைச் சந்தித்து வரும் நிறுவனங்களை, சீன நிறுவனங்கள் கையகப்படுத்துவதைத் தவிர்க்கும் விதமாக ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அந்நிய நேரடி முதலீடுகளுக்கான விதிமுறையை கடுமையாக்கின. இந்த நிலையில், இந்தியாவும் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அரசின் முன் அனுமதி கட்டாயம் என்ற வகையில் திருத்தம் செய்துள்ளது. இதுகுறித்து உள்நாட்டு வர்த்தகம் மற்றும் …
ஏழைகள், தொழில் துறையினருக்கு உதவ கூடுதல் நிவாரணம் விரைவில் அறிவிப்பு – மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்
ஏழைகள், தொழில் துறையினருக்கு உதவ கூடுதல் நிவாரணம் விரைவில் அறிவிப்பு – மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் புதுடெல்லி: கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த ஊரடங்கு தற்போது மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கின. ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால் அவர்கள் வருமானம் …
சீனாவைப் போன்று மற்ற நாடுகளும் கொரோனா தரவுகளை திருத்த வேண்டியிருக்கும்- உலக சுகாதார அமைப்பு
னாவைப் போன்றே மற்ற நாடுகளும் கொரோனா பாதிப்பு குறித்த தரவுகளை திருத்த வேண்டியிருக்கும் என உலக சுகாதார அமைப்பு சூசகமாக கூறி உள்ளது. சீனாவைப் போன்று மற்ற நாடுகளும் கொரோனா தரவுகளை திருத்த வேண்டியிருக்கும்- உலக சுகாதார அமைப்பு உலக சுகாதார அமைப்பின் தலைமையகம் ஜெனிவா: சீனாவின் வுகான் நகரை முதன் முதலில் தாக்கிய கொரோனா, இப்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவி 1.5 லட்சம் உயிர்களை பலி வாங்கி உள்ளது. சீனாவில் அதிகம் பாதிப்படைந்த …
ஊரடங்கின் காரணமாக இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறைந்தது – மத்திய அரசு அதிகாரி தகவல்
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறைந்து இருப்பதாக மத்திய அரசு அதிகாரி தெரிவித்தார். ஊரடங்கின் காரணமாக இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் குறைந்தது – மத்திய அரசு அதிகாரி தகவல் மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது நம் நாட்டில் கொரோனா …
தமிழகத்தில் கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை- மத்திய அரசு அனுமதி
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா முறை சிகிச்சை அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை- மத்திய அரசு அனுமதி புதுடெல்லி: கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்தநிலையில் கொரோனாவுக்கு எதிராக பிளாஸ்மா தெரபி முறையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி குணம் அடைந்தவரின் உடலில் வைரஸ் தொற்றை போராடி அழிக்கும் எதிர்அணுக்கள் (பிளாஸ்மா) உருவாகும். இந்த அணுக்களை எடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட …
இந்திய கடற்படையை சேர்ந்த 21 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு
இந்திய கடற்படையை சேர்ந்த 21 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்திய கடற்படையை சேர்ந்த 21 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு மும்பையில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் பணியாற்றி வரும் 21 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு உள்ள ஒரு கடற்படை மருத்துவமனையில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது கடற்படையில் பதிவாகும் கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் தொகுப்பு ஆகும். அந்த வீரர்களுடன் தங்கியிருந்த சக வீரர்களுக்கும் பரிசோதனை …