ஊரடங்கு காலம் முடிந்த பிறகு பயணிகள் ரயில்கள் படிப்படியாக மீண்டும் இயக்கப்படலாம்

167 ஆண்டுகளில் முதல்முறையாக இந்திய ரயில்வே ஊரடங்கு காலம் முடிந்த பிறகு பயணிகள் ரயில்கள் படிப்படியாக மீண்டும் இயக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதுடெல்லி கொரோனா பாதிப்பு காரணமாக போடபட்ட ஊரடங்கால் ஆசியாவிலேயே மிகப்பழமையானதும், உலகின் 4வது மிகப்பெரியதுமான இந்தியன் ரயில்வே 167 ஆண்டுகளில் முதல்முறையாக முற்றிலும் முடங்கியுள்ளது. நாளொன்றுக்கு 7,349 ரயில் நிலையங்களை இணைக்கும் 20 ஆயிரம் பயணிகள், நீண்டதூர மற்றும் புறநகர் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 20 ஆயிரம் …

கரோனா நோயாளிகள் பிறர் மேல் எச்சில் துப்பினால் கொலை முயற்சி வழக்கு !

ஷிம்லா: கரோனா நோயாளிகள் பிறர் மேல் எச்சில் துப்பினால் அவர்கள் மேல் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும் என்று ஹிமாச்சல் மாநில டிஜிபி எச்சரித்துள்ளார். சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4314 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 118 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த …

மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா… அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு

கொரோனா வைரஸ்பரவல் மூன்றாம் கட்டத்திற்கு நகருகிறது. இதனால் அடுத்தடுத்த நாட்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு கடுமையாக கடைபிடிக்க திட்டமிட்டு உள்ளது. புதுடெல்லி இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதுவரை, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 104 – ஐ எட்டி விட்டது. மராட்டியத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 748 ஆக உயர , பலி எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 445 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 6 பேர் கொரோனாவுக்கு …

ஊரடங்கு பாதிப்பு எதிரொலி; மேலும் ஒரு நிவாரண தொகுப்பு அறிவிக்க மத்திய அரசு பரிசீலனை

ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க மேலும் ஒரு சலுகை தொகுப்பை அறிவிப்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. புதுடெல்லி, இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கால் ஏற்படும் பாதிப்பில் இருந்து வரி செலுத்துவோருக்கும், வர்த்தகத் துறையினருக்கும் நிவாரணம் அளிப்பதற்காக, ஊரடங்கு அறிவிப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பல்வேறு …

நோய் கண்டறியும் கருவிகள் ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு உத்தரவு

மருத்துவ பரிசோதனை மையங்களில் நோய் கண்டறியும் சோதனை கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான கருவிகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. புதுடெல்லி, உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் நோய் கண்டறியும் சோதனை கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முழுவதுமாக தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் …

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பில் இருந்து 291 பேர் மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 693 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியிருக்கிறது. மாநிலங்களில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 690- பேருக்கு கொரோனா தொற்றுள்ளது. அதேபோல், தமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா …

சுகாதாரத் துறை பெண் ஊழியா்களை மிரட்டிய திமுக பிரமுகா் கைது

கோவையில் கணக்கெடுப்பு பணிக்கு சென்ற சுகாதாரத் துறை பெண் ஊழியா்களை மிரட்டிய திமுக பிரமுகரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடு சென்று வந்தவா்கள், கரோனா பாதிப்பு உள்ளவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகளை தமிழக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். கோவை மாநகராட்சி முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுடன், சுகாதாரத் துறை, அங்கன்வாடி ஊழியா்கள் உள்ளிட்டோா் சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி பாதிப்பு உள்ளதா என …

வில்லுப்பாட்டு மூலம் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தும் ஆசிரியா்

ஊரடங்கால் கரோனா குறித்து மக்களிடையே பெருவாரியாக வெளிப்படையாக விழிப்புணா்வு செய்ய முடியாத நிலையில், சமூக ஊடகம் மூலம் ஆசிரியா் ஒருவா் வில்லுப்பாட்டு வாயிலாக விழிப்புணா்வை ஏற்படுத்தி அதை பதிவேற்றம் செய்துள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. எந்தவொரு திட்டம் குறித்த தகவலும் மக்களிடையே முழுமையாக சென்றடைய விழிப்புணா்வு தேவைப்படுகிறது. குறிப்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, கடற்கரை தூய்மை, கழிப்பறை பராமரிப்பு, சுற்றுப்புறத் தூய்மை, சாலைப் பாதுகாப்பு, எய்ட்ஸ் போன்ற கொடிய நோய் குறித்த பாதுகாப்பு விழிப்புணா்வு …

ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகத்தில் மின்சார தேவை 5 ஆயிரம் மெகாவாட் குறைந்தது – அமைச்சர் பி.தங்கமணி தகவல்

ஊரடங்கு உத்தரவு காரணமாக, தமிழகத்தில் தினசரி மின்சாரத்தின் தேவை 5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு குறைந்துள்ளது என மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறினார். சென்னை, இதுகுறித்து, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் தினசரி மின்சாரத்தின் தேவை குறைந்துள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் நாளொன்றுக்கு 16 ஆயிரம் …

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் 8-ந் தேதி நடக்கிறது; எடப்பாடி பழனிசாமிக்கு, பிரதமர் மோடி அழைப்பு

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் 8-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்தார். சென்னை, உலக நாடுகளைப் போன்று, இந்தியாவிலும் கொரோனா நோய் பரவி வருவதை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி அவ்வப்போது மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, வரும் 8-ந் தேதி (புதன்கிழமை) அனைத்து …