புதுடில்லி: உலக தொழிலாளர்கள் அமைப்பு இன்று (ஏப்., 8) வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்டுள்ள, ஊரடங்கு உத்தரவால் உலகம் முழுக்க 270 கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 கோடி இந்திய முறைசாரா தொழிலாளர்கள், வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளது என எச்சரித்துள்ளது. மேலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸால், ஏற்கனவே லட்சக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மற்றும் பிற கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியா, நைஜீரியா, பிரேசில் ஆகிய நாட்டின் தொழிலாளர்கள் …
ராமாயணத்தை மேற்கோள்காட்டி மோடியிடம் உதவி கேட்ட பிரேசில் அதிபர்
புதுடில்லி: அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்செனாரோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடிக்கு, ஜெயிர் போரல்செனரோ எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கடவுள் ராமரின், சகோதரரான லட்சுமணரை காப்பாற்ற, கடவுள் அனுமன், இமயமலையில் இருந்து புனித மருந்தை எடுத்து வந்தார். அதேபோல, இயேசு, நோயுள்ளவர்களை, தன் ஆற்றலால் குணப்படுத்தினார். தற்போது கொரோனாவால், …
ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் பரிந்துரை: பிரதமர்
புதுடில்லி: ஏப்.,14க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மாநில அரசுகள் பரிந்துரை செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் குறித்து பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் முறையில், எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: அனைத்து கட்சி தலைவர்கள் ஆலோசனைகள், பரிந்துரை வழங்கினர். ஊரடங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. ஒவ்வொருவரின் உயிரை காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலகமே, கடுமையான …
14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்- தமிழக அரசு ஆணை
தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்குவதற்கான ஆணையை அரசு பிறப்பித்து உள்ளது. சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு தீவிர பணியாற்றி வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில் உள்ளது. இந்த உத்தரவு கடந்த மார்ச் 24ந்தேதி பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே …
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 149 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது- 149 பேர் உயிரிழப்பு புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த சில தினங்களாக கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. சமூக தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் கடினமான வாரங்கள். இதைக் கடந்து விட்டால் …
சென்னையில் மொத்தம் 149 பேர் கொரோனாவால் பாதிப்பு
சென்னையில் மொத்தம் 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் 690 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 149 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவிக. நகர் மண்டலத்தில் 22 பேர், கோடம்பாக்கம் …
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டதை மறைத்த 150 பேர் மீது வழக்குப்பதிவு
மராட்டியத்தில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டதை மறைத்த 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை, டெல்லியில் கடந்த மாதம் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதுவரை அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 400 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களில் 15 பேருக்கு மேல் உயிரிழந்து விட்டனர். இதையடுத்து நேற்று மும்பை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாமாக முன்வந்து …
கொல்கத்தாவில் ‘கொரோனா’விடம் தப்பிய இரண்டு குழந்தைகள் – குணமடைந்து வீடு திரும்பினர்
கொல்கத்தாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர். கொல்கத்தா, கொல்கத்தா நகரில் உள்ள பொலியகாட்டா ஐ.டி. ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 28-ந்தேதி 2 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டார்கள். ஒன்று 9 மாத பெண் குழந்தை, இன்னொன்று 6 வயது பெண் குழந்தை. இருவரும் சகோதரிகள். 2 பேருக்கும் கொரோனா தொற்று இருந்தது. அவர்களின் தாயும் உடன் இருந்தார். ஆனால் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை. இருந்தாலும் குழந்தைகளுக்காக அவரும் தனி வார்டில் இருந்தார். …
எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை
கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். புதுடெல்லி, உலகம் முழுவதும் சுமார் 184 -க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் வியாபித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியைய பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இதனால், 40- க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. …
மே 15-ந்தேதி வரை பள்ளி- கல்லூரிகள் திறக்கப்படாது?
பள்ளிகள், கல்லூரிகளை திறப்பதை மே 15 வரை நீட்டிக்கவும், அமைச்சர்கள் குழு பரிந்துரைத்து உள்ளது புதுடெல்லி இந்தியாவில் கொரோனா காட்டுத்தீ போல் வேகமாக பரவ தொடங்கியதால், அதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி கடந்த 24-ந் தேதி இரவு அறிவித்தார். ஊரடங்கு அமலுக்கு வந்தபோது இந்தியாவில் கொரோனாவால் 519 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். 9 பேர் உயிரிழந்து இருந்தனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நேற்றுடன் 14 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், …