தட்டுப்பாட்டால் விலைவாசி உயர்ந்து இருப்பதாகவும், எனவே அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் மாநிலங் களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாட்டில் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி, அத்தியாவசிய பொருட்களின் வரத்து இல்லாததால், அவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், விலை உயர்ந்து விட்டதாகவும் பல்வேறு மாநிலங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதை கவனத்தில் கொண்ட …
கொரோனா வைரசுக்கு எந்த சமுதாயம் மீதும் முத்திரை குத்தாதீர்கள் – பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை
கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் என எந்த சமுதாயம் மீதோ, பகுதி மீதோ முத்திரை குத்தாதீர்கள் என்று பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது. புதுடெல்லி, டெல்லியில், நிஜாமுதின் பகுதியில் நடந்த ஒரு மத மாநாட்டில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த மதத்தினர்தான் கொரோனா பரவல் அதிகரிக்க காரணம் என்று சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும், கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களை தாக்கும் சம்பவங்கள் நடந்து …
கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா சரியான திசையில் செல்கிறது – சர்வதேச அமைப்பு பாராட்டு
கொரோனா வைரசுக்கு எதிராக கொள்கை வகுத்து நடவடிக்கை எடுப்பதில் இந்தியா சரியான திசையில் செல்கிறது என்று சர்வதேச அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. புதுடெல்லி, உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிற கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி, 21 நாள் ஊரடங்கை பின்பற்ற வைத்துள்ளது. சமூக இடைவெளியும் சரியாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் பாதிப்பை அடையாத வகையில், மத்திய அரசு ரூ.1.70 லட்சம் கோடி …
ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படும் கொரோனா சிகிச்சைக்கு புதிய டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் – மத்திய அரசு திடீர் முடிவு
கொரோனா வைரஸ் சிகிச்சையில் புதிய டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர் களை ஈடுபடுத்தவும், அவர்களுக்கு ஆன் லைனில் பயிற்சி அளிக்கவும் மத்திய அரசு திடீர் முடிவு எடுத்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக, பொதுமக்களை வீடுகளுக்குள் முடக்க வகை செய்து 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த ஊரடங்கு காலத்திலும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. நமது நாட்டில் 5,200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இன்னும் அச்சுறுத்தல் தொடர்கிறது என்பதையே இது காட்டுகிறது. …
கொரோனா வைரஸ் பாதிப்பால் ரெயில்கள் சரக்கு ஏற்றிச்செல்லும் வருமானம் ரூ.2,125 கோடி இழப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பால் ரெயில்கள் சரக்குகளை ஏற்றிச்செல்வதற்கான வருமானம் ரூ.2,125 கோடி அளவுக்கு குறைந்து விட்டது. புதுடெல்லி, உலக நாடுகளை கதிகலங்க வைத்து வரும் கொரோனா வைரஸ், நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை. தீவிரமாக பரவி வருகிற இந்த வைரசை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளதால் அனைத்து தொழில் நடவடிக்கைகளும் முடங்கி உள்ளன. பொருளாதாரம் நிலை குலைந்துபோய் உள்ளது. இது ரெயில்வே துறையிலும், அதுவும் சரக்கு கையாளுதல் துறையிலும் எதிரொலித்துள்ளது. பிப்ரவரி மாத நிலவரப்படி, …
ஆய்வுக்கூடங்களில் கொரோனாவை கண்டறிய இலவச பரிசோதனை – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
புதுடெல்லி, கொரோனோ வைரஸ் பரிசோதனைக்காக தனியார் ஆய்வகங்கள் வசூலிக்கும் கட்டணம் தொடர்பாக சஷாங் தியோ சுதி என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கொரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனைக்காக தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆய்வகங்கள் 4,500 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கூறி இருப்பதாகவும், ஆனால் இந்த தொகை சாமானிய மக்களுக்கு மிகவும் அதிகம் என்றும், எனவே கட்டணம் இல்லாமல் இலவசமாக பரிசோதனை …
14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்- தமிழக அரசு ஆணை
தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்குவதற்கான ஆணையை அரசு பிறப்பித்து உள்ளது. 14.7 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம்- தமிழக அரசு ஆணை தமிழ்நாடு அரசு சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு தீவிர பணியாற்றி வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில் உள்ளது. இந்த உத்தரவு கடந்த …
ஊரடங்கு உத்தரவு அமல் : 21-ந் தேதிக்கு முன்பாக எங்கும் நகர வேண்டாம் – எல்லை பாதுகாப்பு படையினருக்கு அதிரடி உத்தரவு
ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக எல்லை பாதுகாப்பு படையினர், வருகிற 21-ந் தேதிக்கு முன்னதாக எங்கும் நகர வேண்டாம் என்று அதிரடி உத்தரவு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல் : 21-ந் தேதிக்கு முன்பாக எங்கும் நகர வேண்டாம் – எல்லை பாதுகாப்பு படையினருக்கு அதிரடி உத்தரவு எல்லை பாதுகாப்பு படை புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்கும் வகையில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு …
கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
கொரோனா நோய் தொற்றை விரட்டியடிக்க எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் ஒன்றை ஐஐடி குழு கண்டறிந்து இருக்கிறது. கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள் பொதுவெளியில் கிருமி நாசினி தெளிக்கப்படும் காட்சி ஐஐடியை சேர்ந்த குழு ஒன்று எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரத்தை குறைந்த விலையில் உருவாக்கி இருக்கிறது. இந்த இயந்திரத்தை பயன்படுத்தி மருத்துவமனை, பேருந்து மற்றும் ரெயில்களின் தரையில் உள்ள கிருமிகளை கொன்று கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும். …
மோடி ‛கிரேட், ரியலி குட்’: டிரம்ப் திடீர் பாராட்டு
வாஷிங்டன்: ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை ஏற்றுமதி செய்யவில்லை எனில் அதற்கான விளைவை இந்தியா சந்திக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், தற்போது, மோடி கிரேட், ரியலி குட் என பாராட்டியுள்ளார். உலகளவில் 70 சதவீத ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து உற்பத்தி இந்தியாவில் தான் செய்யப்படுகிறது. இந்த மருந்து கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது. மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் இந்த மருந்தினால் கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடியுமா என்று …