கொரோனா பாதிப்பு: சர்வதேச நாடுகளில் 70% ஹைட்ரோகுளோரோகுயின் தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது

சர்வதேச நாடுகளில் 70 சதவீத ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தின் தேவையை இந்தியா பூர்த்தி செய்வதாக இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுதர்சன் ஜெயின் தெரிவித்துள்ளார். புதுடெல்லி ஹைட்ராக்சிகுளோராகுயின் உள்ளிட்ட மருந்துப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விலக்கிக்கொண்டது. பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கைக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். உலகையே அச்சறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு, அமெரிக்காவுக்கு, இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்திருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். …

58 ஆண்டுகளுக்கு பிறகு ரத்தான உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா!

கேரளாவில் நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா கொரோனா பாதிப்புகளால் ரத்து செய்யப்பட்டு உள்ளது. திருச்சூர் கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழா உலக புகழ்பெற்றது. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் இத்திருவிழாவில் கலந்துகொள்கின்றனர். இந்தாண்டுக்கான விழாவை மே 3-ம் தேதி கொண்டாட திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் திருவிழாக்கள், கோயில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு திருவிழாவில் வெறும் பூஜைகள் மட்டு்ம் …

இந்தியா – அமெரிக்காவின் உறவு முன்பைவிட வலுவடைந்துள்ளது – பிரதமர் மோடி

கொரோனாவுக்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்திற்கு இந்திய அனைத்து விதத்திலும் உதவும் என்று ட்விட்டரில் பிரதமர் மோடி தனது கருத்தை பதிவு செய்துள்ளார். புதுடெல்லி, கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்தது. இதையடுத்து, பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். டொனால்டு டிரம்பின் டுவிட்டுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- இது போன்ற தருணங்கள்தான் நட்பை வலுப்படுத்துகின்றன. …

நாட்டின் சில இடங்களில் ஊரடங்கை தளர்த்தலாம் – பிரதமருக்கு சரத்பவார் யோசனை

நாட்டின் சில இடங்களில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம் என்று என்று பிரதமர் மோடிக்கு சரத்பவார் யோசனை தெரிவித்தார். மும்பை, நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கொரோனா தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி பேசியதாவது:- கொரோனாவுக்கு எதிரான போராட்டம் நீண்ட கால போராட்டம் ஆகும். இது …

கொரோனா தடுப்புக்கு தொழில் நிறுவனங்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் – முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

வருமான வரிச்சலுகையை கருத்தில் கொண்டு கொரோனா நோய் தடுப்புக்கு பெருநிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை, இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மனமுவந்து பங்களிப்பினை அளிக்க தமிழக முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நிதியை பெருநிறுவன சமூக …

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும் – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்கமுடியும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. சென்னை, சீனாவில் உருவெடுத்த ஆட்கொல்லியான கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 14 லட்சத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மலேரியா காய்ச்சல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை, கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு வழங்கினால் நல்ல பலனை கொடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். கொரோனா வைரஸ் பீதி காரணமாக …

கொரோனா சிகிச்சை முறைகளை வகுக்க 19 டாக்டர்கள் கொண்ட நிபுணர் குழு அமைப்பு – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை முறைகளை வகுத்தளிக்க 19 டாக்டர்களை கொண்ட நிபுணர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, இதுகுறித்து தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனாவை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் வகையில், அதற்கான சிகிச்சை நெறிமுறைகளை வகுப்பது மற்றும் மருத்துவ நிர்வாக வசதிக்காக டாக்டர்களை கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு …

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் எண்ணிக்கை 738 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் தேனி மாவட்டத்தில் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 48 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் 60 ஆயிரத்து 739 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 230 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர். …

வடமாநிலங்களில் இருந்து வரும் மளிகை பொருட்களை மாநில எல்லைகளில் தடுக்காமல் தமிழகம் வர அனுமதிக்க வேண்டும் – பிரதமரிடம், அ.தி.மு.க. கோரிக்கை

வடமாநிலங்களில் இருந்து வரும் மளிகை பொருட்களை மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தாமல் தமிழகம் வந்து சேர அனுமதிக்க வேண்டும் என்று பிரதமரிடம், அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை, கொரோனா பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் ஊரடங்கு குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் அ.தி.மு.க. சார்பில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி நவநீதகிருஷ்ணன் எம்.பி. கலந்து …

காய்கறி, பழங்களை நேரடியாக கொள்முதல் செய்வது குறித்து பதில் அளிக்கவேண்டும் – தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

காய்கறி, பழங்கள் உள்ளிட்ட விவசாய பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்வது குறித்து இரண்டு வாரத்துக்குள் தமிழக அரசு பதில் அளிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை, சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் நூலகராக இருப்பவர் வக்கீல் ஜி.ராஜேஷ். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் காய்கறி, பழ வகைகள் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகின்றன. தேசிய அளவில் தோட்டக்கலை உற்பத்தில், தமிழகத்தின் பங்களிப்பு 5.8 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் சுமார் …