அமெரிக்காவில் உள்ள விலங்கியல் பூங்காவில் புலிக்கு கொரோனா பாதிப்பு பற்றி கேள்விப்பட்டதும், தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர் தனது ஆடுகளுக்கு முக கவசம் அணிவித்துள்ளார். ஐதராபாத்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் இந்த வைரஸ் தாக்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6412 ஆக உயர்ந்துள்ளது. 199 பேர் உயிரிழந்துள்ளனர். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளையும் கொரோனா வைரஸ் தாக்கி …
தமிழகத்தில் நாளை அமைச்சரவை கூட்டம்- ஊரடங்கு குறித்து முக்கிய ஆலோசனை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மாநில முதல்வர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை மாலை 5 மணிக்கு அமைச்சரவை …
கோவை மாவட்டத்தில் 4 லட்சம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை
கோவை மாவட்டத்தில் 4 லட்சம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 60 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்த 230 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. இதையொட்டி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இருந்த குடியிருப்புகளில் சுகாதார ஊழியர்கள் சோதனை நடத்தி தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கோவை, மேட்டுப்பாளையம், அன்னூர், பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் வீடுகளில் சுகாதார பணியாளர்கள் …
கொரோனா தடுப்பு நடவடிக்கை; மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டியுள்ளநிலையில், பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து கடந்த மாதம் 24-ந்தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி கொரோனா …
கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது பற்றி முடிவு – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா நோய் சமூகப் பரவலான 3-வது நிலைக்கு போக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நோயின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்றார். சென்னை, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டு உள்ள மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான 12 குழுக்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை …
கொரோனா பற்றிய சந்தேகங்களை தீர்க்க குரல் வழிச்சேவை – எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
கொரோனா பற்றிய சந்தேகங்களை தீர்க்க குரல் வழிச்சேவையை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்திலும், மத்திய சட்டம் மற்றும் நீதி, தொலைத் தொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் டெல்லியிலும் நேற்று, கொரோனா குறித்த சுய தகவல் பதிவு மற்றும் விரைவு நடவடிக்கை அமைப்பின் 94999 12345 என்ற குரல்வழிச் சேவையை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி …
பிரதமர் கூறும் ஆலோசனை படி கர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு – முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
பிரதமர் கூறும் ஆலோசனை படிகர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்துமுடிவு எடுக்கப்படும் என்று முதல்- மந்திரி எடியூரப்பா தெரிவித்து உள்ளார். பெங்களூரு, கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது வருகிற 14-ந் தேதி நிறைவடைகிறது. இந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமா? அல்லது மேலும் நீட்டிக்கப்படுமா? என்பதை தெரிந்துகொள்ள மாநில மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இந்த பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் …
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்படுமா? ‘ அமைச்சர் செங்கோட்டையன் பதில்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்விக்கே இடமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தள்ளிவைப்பதாக அறிவித்தார். அதன்படி, வருகிற 15-ந்தேதி முதல் அந்த தேர்வு நடைபெறும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதோடு, இதன் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு குறித்த பல்வேறு செய்திகளும் உலா வருகின்றன. …
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் அரசு பணியாளர் மரணமடைந்தால் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் அரசு பணியாளர் மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை, இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுத்து வருகிறது. இரவு பகல் பாராது, தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து, பொதுமக்களை காப்பாற்றும் சீரிய பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், …
வெளிமாநில தொழிலாளர்கள் விவரம் கணக்கெடுப்பு – மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை கணக்கெடுத்து அனுப்பும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், வெளிமாநிலத்தில் இருந்து பிழைப்புக்காக தமிழகத்துக்கு வந்த தொழிலாளர்களின் நிலை பரிதாபமாகிவிட்டது. அவர்களுக்கான அடிப்படை தேவைகளை வேலைக்கு அமர்த்தியவர்களே செய்து தர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. எல்லா மாநிலங்களிலும் இதுபோன்ற பிரச்சினை இருப்பதை கருத்தில் கொண்டு, வெளிமாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக வந்த தொழிலாளர்களுக்கு மாநில அரசு …