கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது பற்றி ஜப்பான் பிரதமருடன் தொலைபேசியில் மோடி பேச்சு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது பற்றி ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். புதுடெல்லி, பிரதமர் மோடி, நேற்று ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் தொலைபேசியில் பேசினார். உலகளாவிய கொரோனா வைரஸ் பரவல் நிலை, அதனால் எழுந்துள்ள பொருளாதார சவால்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து பரஸ்பரம் இருவரும் தத்தமது நாடுகளில் எடுத்து வருகிற நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர். கொரோனா …

கொரோனாவை கட்டுப்படுத்த 5 தமிழக மாவட்டங்கள் உள்பட 36 மாவட்டங்கள் மீது தீவிர கவனம் தேவை – மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சியில் பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், தமிழகத்தின் 5 மாவட்டங்கள் உள்பட 36 மாவட்டங்களில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் வேகமாக பரவி வருகிற கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐ.சி.எம்.ஆர்., தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரையில் இந்தியாவில் …

தென்கொரியாவை பின்பற்றி ஆமதாபாத்தில் கொரோனா கண்டறியும் பணி தீவிரம்

தென்கொரியா நாட்டை பின்பற்றி ஆமதாபாத் நகரில் கொரோனா பரவலை தடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆமதாபாத், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளும் அதன் சக்திக்கும், சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. தென்கொரியாவில் “தீவிர கண்காணிப்பு; தேடிச்சென்று சோதனை” என்ற திட்டத்தின் அடிப்படையில் கொரோனா பரவலை தடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது. அதன்படி குறிப்பிட்ட நகரையோ அல்லது ஊரையோ சல்லடை போட்டு கண்காணித்து யாருக்கு எல்லாம் பிரச்சினை இருக்கிறதோ அவர்களை கண்டறிகிறார்கள். …

மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்; சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை

புதுடில்லி: நாடு முழுதும் ‘கொரோனா’ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் பின்பற்ற வேண்டியவை குறித்தும், செய்யக்கூடாத விஷயங்கள் குறித்தும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சில வழிமுறைகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இந்தியாவில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால், இங்கு, 5,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை, 160ஐ தாண்டி சென்றுகொண்டிருப்பதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள், பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், …

புனித வெள்ளி: பிரதமர் மோடி வாழ்த்து!

புதுடில்லி: உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள் இன்று புனித வெள்ளி தினத்தை கொண்டாடுகின்றனர். இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. பிரதமர் மோடி கிறிஸ்தவ மக்களுக்கு தனது வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், ‘இயேசு மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது தைரியமும் நேர்மையும் தனித்து நிற்கின்றன. அவரது நீதி உணர்வும் அவ்வாறே இருக்கிறது. இந்த புனித வெள்ளியன்று, இயேசு கிறிஸ்துவையும், உண்மை, சேவை, நீதிக்கான அவரது அர்ப்பணிப்பையும் நினைவு கொள்வோம்.’ …

ஊரடங்கை மீறிய 1.35 லட்சம் பேர் கைது

சென்னை: தமிழகத்தில், ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் தடையை மீறி வெளியில் சுற்றிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது, 1,25,708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில், 1,06,539 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.45,13,544 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் …

ஒரே நாளில் 2.19 கோடி மின்னணு பரிவர்த்தனைகள்

துடில்லி: இந்தியாவில் கடந்த மார்ச் 30ம் தேதி, சுமார் 2 கோடியே 19 லட்சம் மின்னணு பரிவர்த்தனைகளை மத்திய அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில், மார்ச் 24 முதல் ஏப்.,14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் மாதத்துடன் நிதியாண்டு நிறைவடைவதால், அம்மாதத்தின் கடைசி வாரத்திலும், ஏப்ரலில் முதலிரண்டு வாரங்களிலும் மத்திய அரசு அதிகாரிகளால் பல்வேறு நலத்திட்டங்களுக்கும், பயனாளிகளுக்கும் மின்னணு பரிவர்த்தனை மூலம் நிதி அனுப்பப்படும். அந்த வகையில் மார்ச் …

பிரதமர் மோடியை பின்தொடரும் அமெரிக்கா

புதுடில்லி: பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி ராம்நாத் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளை அமெரிக்காவின் அதிகாரபூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகை டுவிட்டரில் பின் தொடர துவங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலகெங்கும் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவில் அதன் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது. அமெரிக்காவிற்கு ஹைட்ரோக்சிகுளோரோக்வின் மருந்தை தராவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடுமென டிரம்ப் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து மனிதாபிமான முறையில் அமெரிக்காவுக்கு ஹைட்ரோக்சிகுளோரோக்வின் மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்ததை அடுத்து ‘மோடி கிரேட். ரியலி …

கொரோனா தடுப்பு நடவடிக்கை; மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டியுள்ளநிலையில், பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து கடந்த மாதம் 24-ந்தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி கொரோனா …

நெல்லை, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா பாதித்த 81 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இம்மூன்று மாவட்டங்களிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்திருக்கிறது. நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த மூன்று மாவட்டங்களிலும் நேற்று ஒரே நாளில் புதிதாக 22பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்திருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. எனவே இந்த மூன்று மாவட்டங்களிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்திருக்கிறது. …