ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் நல்ல முடிவை எடுத்திருக்கிறார்: கேஜரிவால்

ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நல்ல முடிவை எடுத்திருக்கிறார் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவில் ஏப்ரல் 14 வரை நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது முடிவடைய இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் …

உடனடியாக ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்

மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களுக்காக உடனடியாக ரூ. 1000 கோடியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்தினார். அப்போது தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடியாக ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்வைத்தார். பிரதமர் நரேந்திர மோடியிடம் …

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1666 ஆக உயர்வு

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 1666 ஆக அதிகரித்துள்ளது. மும்பை: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று ஆயிரத்து ஐநூறை தாண்டியது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 92 பேருக்கு கொரோனா …

வண்ணாரப்பேட்டையில் பெண் டாக்டருக்கு கொரோனா

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 27 வயது பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 27 வயது பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவரை வானகரத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இவர் கடந்த 3-ந் தேதி வரை ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்ததால் அவரை சந்தித்த நபர்கள் யார்-யார்? என்று பட்டியல் எடுத்து அவர்களையும் …

ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் கோரிக்கை

ஊரடங்கு உத்தரவு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என திமுக தலைவ முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள 21 நாள் ஊரடங்கு 18 நாட்களைக் கடந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று இந்திய அளவிலும், தமிழகத்திலும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இன்னும் வரவில்லை. பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் …

புதுச்சேரியில் கொரோனாவுக்கு முதல் பலி

புதுச்சேரியின் மாஹே பகுதியைச் சேர்ந்த 71 வயது முதியவர் கொரோனாவுக்கு இன்று காலை உயிரிழந்துள்ளார். புதுச்சேரி: புதுச்சேரியின் மாஹேவைச் சேர்ந்த 71 வயது முதியவர் காய்ச்சலால் அவதிப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த ஒரு வாரமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, மாஹேவில் இருவர் உள்பட மொத்தம் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாஹேவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவரில் …

வீடு, வீடாக நடத்தப்பட்ட ஆய்வில் சென்னையில் 1,222 பேருக்கு சளி, காய்ச்சல் அறிகுறி கண்டுபிடிப்பு – 605 பேர் தொடர் கண்காணிப்பு

வீடு, வீடாக நடத்தப்பட்ட ஆய்வில் சென்னையில் 1,222 பேருக்கு சளி, காய்ச்சல் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 605 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். சென்னை, கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரையும், அவரது வீடுகளை சுற்றி 8 கி.மீ. சுற்றளவில் உள்ள அனைத்து வீடுகளையும் தினந்தோறும் சுகாதாரத்துறை மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னை முழுவதும் 90 நாட்களுக்கு வீடு வீடாக …

விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு: ‘நீட்’ தேர்வு எழுதும் நகரங்களை மாற்றி கொள்ளலாம் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதும் நகரங்களையும் மாற்றிக்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. சென்னை, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வு மே மாதம் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் அந்த தேர்வையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதும் நகரங்களையும் மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமையின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் வினித் …

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து போதிய அளவு கையிருப்பில் உள்ளது – மத்திய அரசு தகவல்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து போதிய அளவு கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். மலேரியா காய்ச்சலை குணப்படுத்த உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மருந்து, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்போது பயன்படுத்தப்படுகிறது. இதற்கு நல்ல பலன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் இந்த மருந்துக்கான தேவை அதிகரித்து உள்ளது. உலகிலேயே ஹைட்ராக்சிகுளோரோகுயின் …

ஒடிசாவில் அதிரடி முக கவசம் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது

ஒடிசாவில் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் முக கவசம் அணிந்து வருபவர்களின் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வர், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 14-ந்தேதியுடன் முடிவுக்கு வர இருக்கும் நிலையில், ஒடிசா மாநிலத்தில் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்தார். மேலும் மக்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது கட்டாயம் முக …