ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் பாககிஸ்தான் இராணுவ முகாம் மற்றும் பயங்கரவாத ஏவுதளங்களை குறிவைத்த இந்திய இராணுவத்தின் தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் 15 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுடெல்லி ஏப்ரல் 10 ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை தாண்டி கெரான் மற்றும் துட்னியல் பகுதியில் பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகளின் ஏவு தளங்களில் இந்திய இராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் எட்டு பயங்கரவாதிகள் மற்றும் 15 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த …
கொரோனா சிகிச்சை முடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ‘டிஸ்சார்ஜ்’
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ ஆகி, வீடு திரும்பினர். சென்னை, சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் 52 வயது பெண் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது 24 வயது மகன், லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். கடந்த மாதம் அவர் லண்டனில் இருந்து சென்னை திரும்பினார். இந்தநிலையில், கடந்த மாத இறுதியில் மாணவரின் தாய் …
அம்பேத்கர் பிறந்த நாள் விழா; மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் மரியாதை செலுத்த அனுமதி
பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் மரியாதை செலுத்த தமிழக அரசு அனுமதியளித்து உள்ளது. சென்னை, நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் செயலாற்றி வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில் உள்ளது. இந்த உத்தரவு கடந்த மார்ச் 24ந்தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு வரும் 14ந்தேதி வரை அமலில் இருக்கும். …
கொரோனா பாதிப்பு : சிகப்பு, ஆரஞ்சு, பச்சை ‘ஸ்மார்ட் ஊரடங்கு’ அறிவிக்க வாய்ப்பு
கொரோனா பாதிப்பால் மக்களின் உயிரும் காப்பாற்றப்பட வேண்டும் அதே சமயத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிகப்பு, ஆரஞ்சு, பச்சை ‘ஸ்மார்ட் ஊரடங்கு’அறிவிக்க வாய்ப்பு உள்ளது. புதுடெல்லி இந்தியாவில் கொரோனாவால் 7000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் பலியானோரின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்தது. இந்த நிலையில் இந்தியாவில் ஊரடங்கு ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் இந்தியாவில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மாநில முதல்வர்கள் கோரியுள்ளனர். அது குறித்து ஆலோசனை நடத்த இன்று …
மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,895 ஆக உயர்வு
மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,895 ஆக உயர்ந்துள்ளது. மும்பை, நாட்டிலேயே மராட்டியம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 134 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,895 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் அதிகபட்சமாக மும்பையில் 113 பேருக்கும், மீரா பாகியேந்தில் 7 பேருக்கும், தானே மற்றும் நவிமும்பையில் தலா 2 பேருக்கும் வாசாய் விரார் மற்றும் பிவாண்டியல் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. …
தமிழக அரசு கேட்டுள்ள நிதியை மத்திய அரசு உடனே வழங்க ஜி.கே.வாசன் வேண்டுகோள்
தமிழக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதையும், பொருளாதாரமின்றி தவிக்கின்ற தொழிலாளர்களையும் கவனத்தில் கொண்டு தமிழக அரசு கேட்டுள்ள நிதியை மத்திய அரசு உடனே வழங்க கோரி ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு கொரோனா ஒழிப்புக்காக பல்வேறு துறைகளின் மூலம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும், ஊரடங்கை அமல்படுத்தியதும் நோய் பரவலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் கொரோனாவுக்கு எதிராக ஊரடங்கை நீட்டிக்கவும், …
ஈஸ்டர் திருநாள் – முதல்-அமைச்சர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
ஈஸ்டர் திருநாளையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னை: கிறிஸ்தவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதையொட்டி அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, கொடியவர்களால் சிலுவையில் அறையப்பட்ட தினம், புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினம், ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த …
ஊரடங்கு இல்லாவிட்டால் 8.2 லட்சம் போ் பாதிக்கப்பட்டிருப்பா்: சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல்
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தி இருக்காவிட்டால் அல்லது தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் விட்டிருந்தால் 8.2 லட்சம் போ் வரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பாா்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் கரோனா பாதிப்பு நிலைமை குறித்து சுகாதாரத் துறை அமைச்சக இணைச் செயலா் லவ் அகா்வால், செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்தாா். அவா் கூறியதாவது: நாட்டில் கரோனா தொற்று பரவுவதற்கான அறிகுறிகள் தென்பட்டவுடனே, நோய்த்தொற்று பரவும் இடங்களைக் கண்டறிந்தது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, …
கரோனா: சென்னையில் 84 வயது மூதாட்டிஉள்பட 3 போ் குணமடைந்து வீடு திரும்பினா்
சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 84 வயது மூதாட்டி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சிகிச்சையில் குணமடைந்ததால் வீடு திரும்பினா். தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் சென்னை ஆகும். வெளிநாட்டிலிருந்து வந்தவா்கள், அவா்களுடன் தொடா்பிலிருந்தவா்கள் என சென்னையில்தான் அதிகம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் உள்ளனா். குறிப்பாக சென்னை மண்டலம் 1 (திருவொற்றியூா்), 5 (ராயபுரம்), 8 (அண்ணாநகா்) உள்ளிட்டவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் கரோனாவால் சென்னை அதிக அளவில் …
தமிழகத்தில் கரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி: உயிரிழப்பு 11 ஆக உயர்வு
கரோனா நோய்த்தொற்றுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார். தமிழகத்தில் இதுவரை 9,527 நபா்கள் கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களில் வெள்ளிக்கிழமை 911 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. சனிக்கிழமை புதிதாக 58 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 969-ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு …