அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்தியாவில் இருந்து சொந்தநாட்டிற்கு திரும்ப அமெரிக்கர்கள் விரும்பவில்லை. புதுடெல்லி: ஆஸ்திரேலியாவை சேர்ந்த 444 பேர் வார இறுதியில் புதுடெல்லியில் இருந்து மெல்போர்னுக்கு சிறப்பு விமானத்தில் சென்று உள்ளனர். ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள அமெரிக்காவிற்கு செல்ல இங்குள்ள அமெரிக்கர்கள் விரும்பவில்லை. இந்த வார தொடக்கத்தில், இங்குள்ள அமெரிக்கர்களை சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்ல அமெரிக்க வெளியுறவுத்துறை சிறப்பு விமானங்களை இயக்கி வந்தாலும், பல அமெரிக்க பிரஜைகள் இந்தியாவில் தங்க …
முன்னாள் மத்திய மந்திரி ராஜசேகரன் உடல்நல குறைவால் மரணம்
முன்னாள் மத்திய மந்திரி ராஜசேகரன் உடல்நல குறைவால் மரணம் அடைந்து உள்ளார். பெங்களூரு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி எம்.வி. ராஜசேகரன் உடல்நல குறைவால் இன்று மரணம் அடைந்து உள்ளார். அவருக்கு வயது 91. கர்நாடகாவில் ராமநகரா நகரின் மரலவாடி பகுதியில் கடந்த 1928ம் ஆண்டு செப்டம்பர் 12ந்தேதி பிறந்த எம்.வி. ராஜசேகரன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். வேளாண் வல்லுனர் மற்றும் கிராம வளர்ச்சி ஆலோசகராக இருந்த இவர், எம்.எல்.சி. …
ஊரடங்கு விதிகளை மீறிய வெளிநாட்டு சுற்றுலாவாசிகளுக்கு நூதன தண்டனை
ஊரடங்கு விதிகளை மீறிய வெளிநாட்டு சுற்றுலாவாசிகளுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர். டேராடூன், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை நேற்று வரை 273 ஆக உயர்ந்து இருந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் தேவையின்றி …
கொரோனா பாதிப்பால் இந்திய நிறுவனங்களை வெளிநாடுகள் கையகப்படுத்தும் நிலை- ராகுல் காந்தி
கொரோனா வைரஸ் பொருளாதார பாதிப்பால் இந்திய நிறுவனங்களை வெளிநாடுகள் கையகப்படுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளது என ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். புதுடெல்லி: கொரோனாவைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கபட்டு உள்ளது. இதனால் கடந்த மாதம் இந்தியாவில் பெரும்பாலான வணிகங்கள் மற்றும் நிதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. ஊரடங்கால் பொருளாதாரத்தில் பெரும் மந்த நிலை உருவாகும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நடப்பு நிதியாண்டில் இந்தியா வெறும் 1.5-2.8 சதவீத வளர்ச்சியைக் காணும் என்று உலக வங்கி கணித்துள்ளது – இப்போது …
டெல்லியில் லேசான நிலநடுக்கம்- மக்கள் அச்சம்
டெல்லியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. கொரோனாவால் வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்கள் அச்சம் அடைந்தனர். புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று மாலை 5.45 மணியளவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன. கொரோனா பாதிப்பு காரணமாக வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் மக்கள், நில நடுக்கத்தால் அச்சம் அடைந்தனர். டெல்லி வாசிகள் பலரும் நில நடுக்கத்தை உணர முடிந்ததாக தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் …
தமிழகத்தில் ஒரே நாளில் 106 பேருக்கு நோய் தொற்று; கொரோனா பாதிப்பு 1,075 ஆக உயர்வு – வீட்டு கண்காணிப்பில் 39 ஆயிரம் பேர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்தது. சென்னை, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,075 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டவர்களில் ஒருவர் நேற்று மரணம் அடைந்ததை தொடர்ந்து, …
மார்ச் 14 முதல் 20-ந்தேதி வரை டெல்லியில் இருந்து தமிழகம் வந்த ரெயில்களில் பயணம் செய்தவர்கள் யார்? – உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள ரெயில்வே வேண்டுகோள்
மார்ச் 14 முதல் 20-ந்தேதி வரை டெல்லியில் இருந்து தமிழகம் வந்த ரெயில்களில் பயணம் செய்தவர்கள், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தெற்கு ரெயில்வே பாதுகாப்புப்படை கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார். சென்னை, தெற்கு ரெயில்வே பாதுகாப்புப்படை கமிஷனர், சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:- டெல்லியில் உள்ள நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் இவர்கள் பயணம் செய்த ரெயில்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. …
‘காய்கறி, பழங்களை அதிகம் சாப்பிடுங்கள்’ ஊரடங்கால் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் – மருத்துவர்கள் எச்சரிக்கை
ஊரடங்கால் மக்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் உண்டு என மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர். மேலும், காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடவேண்டும் என்றும் அவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். சென்னை, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான அலுவலகங்களில் பணியாளர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அலுவலக ஊழியர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பணிகளை கையாள தொடங்கி விட்டனர். குழந்தைகள் வேறு வழியில்லாமல் டி.வி. …
இந்தியாவில் கொரோனாவுக்கு 273 பேர் பலி – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் 273 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் கொரோனா வைரசின் தாக்கம் குறையவில்லை. நேற்று முன்தினம் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக் கப்பட்டு இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று 8 ஆயிரத்தை தாண்டியது. மத்திய சுகாதார அமைச்சகம் …
மத்திய பிரதேசத்தில் முக கவசம் அணிவதை கேலி செய்தவருக்கு கொரோனா பாதிப்பு
மத்திய பிரதேசத்தில் முககவசம் அணிவதை கேலி செய்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. போபால், மத்திய பிரதேச மாநிலம் சாகர் எனும் மாவட்டதில் 25 வயது இளைஞர் ஒருவர் டிக் டாக்கில் முககவசம் அணிவதை கேலி செய்யும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் முககவசத்தை தூக்கி எறிந்து விட்டு கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள் என்றும் கூறியிருந்தார். சமீபத்தில் அவர் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு …