டெல்லியில் மத்திய மந்திரிகள் அலுவலகம் சென்று தங்கள் பணிகளை தொடங்கினர். புதுடெல்லி, கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டன. அரசு அலுவலகங்களில் குறைந்த அளவிலான ஊழியர்களே பணிக்கு வருகிறார்கள். டெல்லியில் உள்ள மத்திய அமைச்சக அலுவலகங்களிலும் பணிகள் முடங்கின. ஊரடங்கின் காரணமாக வீடுகளில் இருந்தபடியே பணிகளை …
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது. புதுடெல்லி, சீனாவில் உருவான கொடூர கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் தொடர்ந்து தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தினந்தோறும் ஆயிரக்கணக் கானோருக்கு பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. …
தமிழ் புத்தாண்டு ஜனாதிபதி-துணை ஜனாதிபதி வாழ்த்து
தமிழ் புத்தாண்டையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதுடெல்லி, தமிழ் புத்தாண்டையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், தமிழ் புத்தாண்டு, விஷூ உள்ளிட்ட இந்த விழாக்கள் பல்வேறு கலாசாரங்கள், ஒற்றுமை ஆகியவற்றின் அடையாளமாக விளங்குவதாகவும், கொரோனாவின் பாதிப்பால் நாடு இதற்கு முன் எப்போதும் கண்டிராத பெரும் சவாலை சந்தித்து இருப்பதால், மக்கள் சமூக விலகலை பின்பற்றி எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் …
இலங்கையில் 80 இந்தியர்கள் சிக்கி தவிப்பு; பணம் குறைந்து வருவதால் உடனடியாக மீட்க கோரிக்கை
இலங்கையில் சிக்கி தவித்து வரும் 80 இந்தியர்கள் கையில் இருக்கும் பணம் குறைந்து வருவதால் உடனடியாக தங்களை மீட்க கோரிக்கை விடுத்துள்ளனர். புதுடெல்லி, சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் தனது கோரப்பிடியால் மிரட்டி வருகிறது. கொரோனா வைரசால் பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவுக்கு முன் இந்தியாவில் இருந்து இலங்கை சென்ற 80 இந்தியர்கள் அங்கு சிக்கி …
மக்களின் தேவையை பூர்த்தி செய்ய நாடு முழுவதும் 20 லட்சம் சில்லரை விற்பனை கடைகள் -மத்திய அரசு ஏற்பாடு
மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நாடு முழுவதும் 20 லட்சம் சில்லரை விற்பனை கடைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. கொரோனாவின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கடைகளை திறக்கவும் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கிறது. பொருட்களை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதிலும் சிரமம் உள்ளது. பல இடங்களில் மார்க் கெட்டுகளிலும், கடைகளிலும் சமூக விலகலை கடைபிடிக்காமல் மக்கள் நெருக்கமாக நிற்பதால் கொரோனா தொற்று எளிதில் …
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! S .A .சுபாஷ் பண்ணையார்
இளமை பொங்கி இனிமை ஓங்கிட வளர்பிறை போல அறிவும் வளர்ந்திட தெளிவான அறிவுடன் திறமை மிகுந்திட வளமும் பெருகிட வருவாய் தமிழ் புத்தாண்டே! மதமும் இனமும் மனதினே ஆளாமல் மனிதமும் புனிதமும் மலையாய் உயரட்டும்..! இடரும் இன்னலும் இனிமேலும் துளிராமல் வளரும் வெண்ணிலவாய் வருங்காலம் பிறக்கட்டும்..! செல்வம் பெருகி வறுமை தீர இல்லாமை என்ற நிலைமை மறைய நல்வினை புரிந்து நன்மை பெற்றிட வல்லமை தந்திட வருவாய் தமிழ் புத்தாண்டே! வருகின்ற புத்தாண்டு வளம் சேர்க்கட்டும்! வயலெல்லாம் விளைந்திருக்க …
நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
நாடு தழுவிய ஊரடங்கு நாளையுடன் நிறைவடய உள்ள நிலையில், நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் கொரோனா வைரசின் தாக்கம் குறையவில்லை. நாளையுடன் (14 ஆம் தேதி) நிறைவடைய உள்ள 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு, மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கலாம் என்று …
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்து உள்ளன -அமைச்சர் தாமஸ் ஐசக்
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்து உள்ளன என அமைச்சர் தாமஸ் ஐசக் கூறி உள்ளார். திருவனந்தபுரம் கேரளாவில் 376 கொரோனா வைரஸ் பாதிப்புகள் உள்ளன. கொரோனா பாதிப்பால் 3 பேர் உயிர் இழந்து உள்ளனர். 36 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். ஒரு வாரத்திற்கும் மேலாக இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. ஒரு வாரத்திற்கு முன்பு, கேரளாவில் 357 பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இறந்தவர்களின் எண்ணிக்கை அப்படியே உள்ளது. கடந்த மாதம், மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதலிடத்தில் …
தரமற்ற பொருட்கள் ஏற்றுமதி விமர்சனம் : சீனா கடுமையான தரக்கட்டுப்பாடு சோதனை நடவடிக்கைகள்
தரமற்ற பொருட்கள் ஏற்றுமதி விமர்சனம் : சீனா கடுமையான தரக்கட்டுப்பாடு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புதுடெல்லி: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், வெளிநாடுகளின் தேவைக்காக மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியை சீனா அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 1-ந் தேதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 386 கோடி முக கவசங்கள், 3 கோடியே 75 லட்சம் கவச உடைகள், 16 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள், 21 லட்சம் சோதனை கருவிகள் ஆகியவற்றை …
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 308 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 308 ஆக உயர்ந்து உள்ளது. புதுடெல்லி, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை நேற்று வரை 273 ஆக உயர்ந்து இருந்தது. கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து மராட்டிய மாநிலமே முதல் இடம் வகிக்கிறது. அங்கு 2,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கையும் அம்மாநிலத்திலேயே அதிகமாக உள்ளது. …