நூறு நாள் வேலைத்திட்ட சம்பள பாக்கியான ரூ.7 ஆயிரத்து 300 கோடி முழுமையாக வழங்கப்பட்டு விட்டதாக மத்திய மந்திரி தெரிவித்தார். புதுடெல்லி, ஊரடங்கு காலத்தில், ஏழைகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஊரக வளர்ச்சித்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் பட்டியலிட்டுள்ளார். அவர் கூறியதாவது:- நூறு நாள் வேலைத்திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.7 ஆயிரத்து 300 கோடி சம்பள பாக்கி நிலுவையில் இருந்தது. அதை முழுமையாக வங்கிக்கணக்கில் …
மே 3-ந்தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மே 3-ந்தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 25-ந்தேதியில் இருந்து இன்று வரை 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இன்று நள்ளிரவுடன் 21 நாள் கெடு முடிவடைகிறது. ஆனால் நாம் நினைத்தது போன்று கொரோனா வைரஸ் கட்டுக்குகள் வரவில்லை. இந்த 21 நாள் காலக்கட்டத்தில்தான் கொரோனா வைரசின் வீரியம் …
தமிழகத்தில் ஊரடங்கு 30-ந் தேதி வரை நீட்டிப்பு – கொரோனா பாதிப்பை தொடர்ந்து முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவு
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில், தமிழகத்தில் ஊரடங்கை 30-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மே மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் விலையின்றி கிடைக்கும் என்றும் அறிவித்து உள்ளார். சென்னை, கொரோனா நோய்க் கிருமி பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டன. இருந்தபோதிலும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் …
சென்னையில் முக கவசம் அணிவது கட்டாயம் மீறினால் வாகனங்கள் பறிமுதல் – மாநகராட்சி அதிரடி உத்தரவு
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னையில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் உள்ள மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்திலும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் மத்திய, மாநில அரசுகள் பணிவுடன் சொல்வதை கேட்காமலும், கண் …
ஒரே நாளில் புதிதாக 98 பேருக்கு கொரோனா தொற்று: தமிழகத்தில் 31 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு – மொத்த எண்ணிக்கை 1,173 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 10 வயதுக்கு உட்பட்ட 31 குழந்தைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். சென்னை, சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய 25 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9 தனியார் பரிசோதனை மையங்கள் ஆகும். நேற்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. …
மக்களுக்கு உணவு பொருட்களை நேரடியாக வழங்க தடை: தமிழக அரசு உத்தரவை எதிர்த்து தி.மு.க., ம.தி.மு.க. அவசர வழக்கு – ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
ஏழை மக்களுக்கு உணவு மற்றும் உதவிப்பொருட்களை நேரடியாக வழங்க தடை விதித்த தமிழக அரசு உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க., ம.தி.மு.க. சார்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சென்னை, கொரோனா வைரசை கட்டுப்படுத்த தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில், தினக்கூலி தொழிலாளர்கள், ஏழைகள், நடைபாதையில் வசிப்போர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அரசியல் கட்சி பிரமுகர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வழங்கி வருகின்றனர். இவர்களது செயல் …
ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டாம் என கூறவில்லை – அமைச்சர் வேலுமணி பேட்டி
ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய மற்றும் உணவு பொருட்களை வழங்க வேண்டாம் என யாரும் கூறவில்லை என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டி அளித்துள்ளார். சென்னை, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது. ஆலோசனை கூட்டத்துக்கு பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் நகர்புற உள்ளாட்சி பணியாளர்களின் தொடர் …
டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக பாலச்சந்திரன் நியமனம்
டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக பதவி ஏற்ற அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி அருள்மொழி இருந்து வந்தார். அவர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், புதிய தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கா.பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கா.பாலச்சந்திரன், உடனடியாக சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு நேற்று சென்று பொறுப்பு …
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எப்போது? – கல்வித்துறை தகவல்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 27-ந்தேதி தொடங்க இருந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9½ லட்சம் மாணவர்கள் எழுத இருந்தனர். ஆனால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அது தள்ளிவைக்கப்படுகிறது என்றும், ஏப்ரல் 15-ந்தேதி அன்று மீண்டும் தேர்வு தொடங்கும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்ட சபையில் அறிவித்தார். இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் …
எதிர்க்கட்சிகள் உண்மைக்கு புறம்பாக பிரசாரம்: நிவாரண உதவிகளை பாதுகாப்பாக வழங்குவதே அரசின் நிலைப்பாடு – தடை குறித்து தமிழக அரசு விளக்கம்
கொரோனா நிவாரண உதவிகளை பாதுகாப்பாக வழங்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்று தடை உத்தரவு குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சுனாமி, பெரு வெள்ளம், ஒகி புயல், வர்தா புயல் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களின் வீடுகள், தினசரி உபயோகப் பொருட்கள், வாழ்வாதாரம் போன்றவை இழந்து நின்ற சோதனையான காலகட்டத்தில் தன்னார்வலர்கள் மற்றும் அமைப்புகள் செய்த பணிகள் மகத்தானது. அதை தமிழ்நாடு அரசு மனமுவந்து …