ரெயில் சேவை ரத்து காரணமாக, மே 3-ந் தேதி வரை பயணம் செய்ய முன்பதிவு செய்யப்பட்ட 39 லட்சம் ரெயில் டிக்கெட்டுகளை ரெயில்வே துறை ரத்து செய்தது. புதுடெல்லி, நாடு தழுவிய ஊரடங்கு, மே 3-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால், ரெயில்கள் ரத்து, 3-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 9 ஆயிரம் பயணிகள் ரெயில் கள், 3 ஆயிரம் மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட 15 ஆயிரத்து 523 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால், நேற்று (புதன்கிழமை) …
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு; குஜராத் முதல்-மந்திரி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்
குஜராத் முதல்-மந்திரி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அந்த மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். காந்திநகர், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அடுத்த மாதம் 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தநிலையில் குஜராத்தில் கொரோனா தடுப்பு பற்றிய ஆலோசனை கூட்டம் மாநில முதல்-மந்திரியின் அலுவலக இல்லத்தில் …
தமிழகத்தில் 2 வகை வவ்வால்களில் கொரோனா வைரஸ்; இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவலால் பரபரப்பு
தமிழகத்தில் காணப்படும் 2 வகை வவ்வால்களில் கொரோனா வைரஸ் காணப்படுவது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுடெல்லி, கொலைகார கொரோனா வைரஸ் தொற்று நோய் உலக நாடுகளையெல்லாம் பெருத்த கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. உலகமெங்கும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வீடுகளுக்குள் அடைப்பட்டு கிடக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, இமாசல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் காணப்படுகிற 2 வகை வவ்வால்களில் “வவ்வால் கொரோனா” …
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது
காய்கறிகள் விளைச்சல் அதிகம் காரணமாக ஊரடங்கிலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து தங்கு தடையின்றி வருகிறது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது காய்கறிகள் போரூர்: கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி 350-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் தினசரி விற்பனைக்கு வருகிறது. கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுத்திடும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு …
கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியது
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 933 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா வைரஸ் புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து …
இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகள் – சுகாதாரத்துறை
இந்தியாவில் 170 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு உள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகள் – சுகாதாரத்துறை சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளது என …
பொது போக்குவரத்து தடை தொடர்ந்து நீடிக்கும் – மத்திய அரசு அறிவிப்பு
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்கள், மாவட்டங்கள் இடையேயான போக்குவரத்துக்கு தடை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு விஷயங்களுக்கு தொடர்ந்து தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- * அனைத்து பகுதிகளிலும் சமூக விலகல் திட்டம் தொடர்ந்து நீடிக்கும். * மத வழிபாட்டு …
எந்தெந்த தொழில்களுக்கு அனுமதி? -மத்திய அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும், வெளியில் வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எந்தெந்த தொழில்களுக்கு அனுமதி? -மத்திய அரசின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிய சாலை புதுடெல்லி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் …
ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டத்தொழிலுக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு
புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அவசியம் எனக் கூறிய பிரதமர் மோடி, மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், ‘‘வருகிற 20-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவை மிகவும் கடுமையாக பின்பற்ற வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20-க்குப் பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு. அதேவேளையில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக …
அமெரிக்கா, சீனாவில் இருந்து சுவாசக்கருவிகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வருகை – சென்னைக்கு சரக்கு விமானத்தில் வந்தன
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சுவாசக்கருவிகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அடங்கிய 150 பார்சல்கள் சென்னைக்கு சரக்கு விமானங்கள் மூலம் கொண்டு வரப்பட்ட உள்ளன. சென்னை, கொரோனா வைரஸ் பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போனாலும் நோய் பரவுதலை முற்றிலும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ கருவிகள் தேவைக்கு ஏற்ப போதுமான அளவு இல்லாமல் …