பெர்லின்: உலக நாடுகள் கண்டறிந்துள்ள கொரோனா வைரஸ் தொற்றுகள் எண்ணிக்கை வெறும் 6% தான் என்றும், உலகளவில் தொற்று ஏற்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை கோடிகளை தாண்டும் என ஜெர்மன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அதிர்ச்சி ஊட்டுகின்றனர். இன்றைய (ஏப்.,10) நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்துள்ளது. 3.5 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில், ‘லான்செட் தொற்றுநோய்கள்’ என்ற மருத்துவ சஞ்சிகையில் வந்த தகவல்களை …
சவுதி மன்னர் குடும்பத்தை சேர்ந்த 150 பேருக்கு கொரோனா
சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தினரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரியாத்: சவுதிஅரோபியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. அங்கு இதுவரை 3,200 பேர் பாதிக்கப்பட்டும் 44 பேர் பலியாகியும் உள்ளனர். இந்த நிலையில் சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தினரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. …
4 மாதங்களில் உலகமெங்கும் 15 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது
மாதங்களில் கொரோனா வைரஸ், உலகமெங்கும் 15 லட்சம் பேருக்கு பரவி உள்ளது. இதற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்தது. பாரீஸ்: சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி, கொரோனா வைரஸ் முதன்முதலாக உருவானது கண்டு அறியப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த 4 மாதங்களில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், இங்கிலாந்து என்று கிட்டத்தட்ட 200 நாடுகளில் இந்த வைரஸ் பரவிவிட்டது. இதன் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இன்னும் ஒரு வழி கண்டறியப்படவில்லை. …
கொரோனாவில் இருந்து குணமடைந்த 3 லட்சத்து 50 ஆயிரம் பேர்
உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரசில் இருந்து குணமடைந்துள்ளனர். ஜெனிவா: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மேலும், மருத்துவத்துறையினரின் தீவிர சிகிச்சை மற்றும் தன்னலமற்ற சேவைகளால் …
கொரோனா வைரசால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியது
கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 205 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கிடையே, இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு …
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் போரிஸ் ஜான்சன்
கொரோனா வைரஸ் பாதிப்பால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் ஜான்சன் தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். லண்டன்: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் 65 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் (55) கொரோனா வைரஸ் பரவியது கடந்த மாதம் …
உலகின் பல்வேறு பகுதிகளில் தோன்றிய ‘பிங்க் சூப்பர் மூன்’ – நிலவின் அறிய புகைப்படங்களின் தொகுப்பு
உலகின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தோன்றிய ‘பிங்க் சூப்பர் மூன்’ நிலவின் அறிய புகைப்படங்களில் சிலவற்றை காணலாம். மாஸ்கோ: பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தொலைவு வழக்கமான தூரம் 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர்கள் ஆகும். ஆனால், சில வானியல் நிகழ்வுகளின் போது நிலவு பூமிக்கு மிகவும் அருகில் வரும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வுகளின் போது பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரம் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் குறைந்து …
‘நன்றி நண்பரே’ நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் டுவிட்
ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை இஸ்ரேலுக்கு அனுப்பியதற்கு நன்றி நண்பரே என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். ஜெருசலேம்: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இஸ்ரேலிலும் பரவி வருகிறது. அந்நாட்டில் 9 ஆயிரத்து 968 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, இந்தியாவில் மலேரியா நோய்க்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்பட்டுவரும் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் எனப்படும் மருந்து கொரோனா வைரசை ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்துவதில் முக்கிய …
இங்கிலாந்தில் ‘கொரோனா’வுக்கு மேலும் ஒரு இந்திய டாக்டர் பலி
இங்கிலாந்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு இந்திய டாக்டர் பலியானார். ஆபத்தான நிலையில் இருக்கும் மேலும் 5 டாக்டர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லண்டன்: இங்கிலாந்து நாட்டில், தேசிய சுகாதார பணியில் சுமார் 65 ஆயிரம் இந்திய டாக்டர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்களில் 70 சதவீதம் பேர் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்கள். இங்கிலாந்தில் கொரோனா தாக்குதல் அதிகமாக இருக்கும் நிலையில், அங்கு இந்திய டாக்டர்கள் முன்னணியில் நின்று களப் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே அங்கு 2 நாட்களுக்கு …
சீனாவில் புதிதாக 63 பேருக்கு கொரோனா பாதிப்பு
வெளிநாடுகளில் இருந்து திரும்பிய சீனர்களால் இரண்டாம் கட்டமாக நோய் பரவல் உருவாகி இருப்பதாக சீனாவில் கவலை எழுந்துள்ளது பீஜிங்: சீனாவில் புதிதாக 63 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 61 பேர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள். இதையடுத்து, வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 82 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. மேலும் 2 பேர் பலியானதால், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 335 ஆக உயர்ந்தது. சீனாவில் இயல்புநிலை திரும்பி வருகிறது. கொரோனா தோன்றிய …