கொரோனாவை எதிர்த்துப் போராடி வரும் இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் விதமாக, மேட்டர்ஹான் என்ற மலையில் இந்திய தேசிய கொடியை ஒளிரவிட்ட சுவிட்சர்லாந்தின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையில் ஒளிர்விக்கப்பட்ட இந்திய தேசிய கொடி சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் இந்திய தேசிய கொடி ஒளிரும் புகைப்படம். புதுடெல்லி: கொரோனா வைரஸ் உலகில் கடும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா முதலிடத்திலும், இத்தாலி இரண்டாவது இடத்திலும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் …
சீனாவைப் போன்று மற்ற நாடுகளும் கொரோனா தரவுகளை திருத்த வேண்டியிருக்கும்- உலக சுகாதார அமைப்பு
சீனாவைப் போன்றே மற்ற நாடுகளும் கொரோனா பாதிப்பு குறித்த தரவுகளை திருத்த வேண்டியிருக்கும் என உலக சுகாதார அமைப்பு சூசகமாக கூறி உள்ளது. சீனாவைப் போன்று மற்ற நாடுகளும் கொரோனா தரவுகளை திருத்த வேண்டியிருக்கும்- உலக சுகாதார அமைப்பு சீனாவின் வுகான் நகரை முதன் முதலில் தாக்கிய கொரோனா, இப்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவி 1.5 லட்சம் உயிர்களை பலி வாங்கி உள்ளது. சீனாவில் அதிகம் பாதிப்படைந்த வுகான் நகரில் கடைசி நிலவரப்படி, கொரோனா …
பிறந்த நாளுக்கு யாருமே வராததால் கவலைப்பட்ட சிறுவன்… வாகனங்களில் அணிவகுத்து வந்து வாழ்த்திய போலீசார்
அமெரிக்காவில் கொரோனா அச்சம் காரணமாக பிறந்தநாள் விழாவிற்கு யாருமே வராததால் கவலையில் இருந்த சிறுவனுக்கு, போலீசார் வந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிறந்த நாளுக்கு யாருமே வராததால் கவலைப்பட்ட சிறுவன்… வாகனங்களில் அணிவகுத்து வந்து வாழ்த்திய போலீசார் வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. 7.10 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய் அறிகுறி …
கொரோனா தாக்குதலில் பரிதாபம்; இங்கிலாந்து முதியோர் இல்லங்களில் 1,400 பேர் பலி
ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், போன்றே கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இங்கிலாந்தும் அதிகமான உயிர்ப்பலி கொடுத்துள்ளது. லண்டன், இதில், முதியோர் இல்லங்களில் இறந்தவர் சதவீதத்திலும் இந்த நாடுகளுக்கு இடையே ஏறக்குறைய ஒற்றுமை காணப்படுவது, வேதனை கலந்த ஆச்சரியம். ஆம், இந்த 4 நாடுகளிலுமே இதுபோன்ற இல்லங்களில் வசித்த சுமார் 18 சதவீதம் முதல் 20 சதவீதம் வரையிலான முதியவர்கள் உரிய சிகிச்சை கிடைக்காமலும், போதிய கவனிப்பும் இன்றி கொரோனாவுக்கு தங்கள் உயிரை பறிகொடுத்து உள்ளனர். இதை உறுதிப்படுத்துவதுபோல், இங்கிலாந்தின் …
பிரேசில் சுகாதாரத்துறை மந்திரி பதவி நீக்கம் – அதிபர் போல்சனரோ அதிரடி
ஊரடங்கை கடைப்பிடிக்க வலியுறுத்திய பிரேசில் சுகாதாரத்துறை மந்திரியை அதிபர் போல்சனாரோ அதிரடியாக பதவி நீக்கம் செய்தார். பிரேசிலியா, கொரோனா வைரசை குணப்படுத்த இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தனிமைப்படுத்தல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வருகிறது. எனவேதான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான நாடுகள் தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தி, மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பிரேசில் …
கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய விவகாரத்தில் சர்வதேச விசாரணை? – டிரம்புக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை
கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய விவகாரத்தில் சர்வதேச அளவில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று டிரம்புக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு, அந்த நாட்டின் செல்வாக்கு மிக்க குடியரசு கட்சியின் செனட் சபை எம்.பி. மார்கோ ரூபியோ தலைமையிலான எம்.பி.க்கள் குழு நேற்று முன்தினம் கூட்டாக ஒரு கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில் அவர்கள், “கொரோனா வைரசின் தோற்றம், உலக சுகாதார நிறுவனத்தின் முடிவு ஆகியவை பற்றிய வெளிப்படையான …
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு: பலி எண்ணிக்கை 35 ஆயிரம் ; 2.2 கோடி பேர் வேலை இழப்பு
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது. 2.2 கோடி பேர் வேலை இழந்து உள்ளனர். வாஷிங்டன் உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தொற்றால் 2,152,000 பேர் பாதிக்கபட்டு உள்ளனர். கிட்டத்தட்ட 145,000 உயிரிழந்து உள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் 667,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்து …
2025ல் மீண்டும் கொரோனா தாக்க வாய்ப்பு; ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணிப்பு
வரும் 2025ம் ஆண்டில் மீண்டும் கொரோனா தாக்க வாய்ப்பு உள்ளது என்று ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். நியூயார்க், உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் குறித்து கணித கணக்கீடுகளின் அடிப்படையில் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வொன்றை மேற்கொண்டனர். அதன் முடிவுகளில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: சமூக இடைவெளி விடுவதை உடனடியாக தளர்த்தினால், அது புதிய கொரோனா நோயாளிகள் பெருமளவில் உருவாக வழிவகுக்கும். கொரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த புதிய சிகிச்சை …
உலக அளவில் கொரோனா பலி 1.41 லட்சம்; அமெரிக்கா தொடர்ந்து முதல் இடம்
உலக அளவில் கொரோனாவுக்கு 1.41 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். பாரீஸ், உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்தை கடந்தும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 15 ஆயிரத்தை கடந்தும் சென்று கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிலும், பலியிலும் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. அங்கு 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. ஸ்பெயினை பொறுத்தமட்டில் கொரோனா …
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் – தென்கொரியாவில் ஆளும் கட்சி அமோக வெற்றி
தென்கொரியாவில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், அந்த நாட்டின் ஆளும் கட்சி அமோக வெற்றி பெற்றது. சியோல், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பல முக்கிய நிகழ்வுகளை ஒத்திவைத்துள்ள நிலையில், அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் தென்கொரியா நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தலை நடத்தியது. இதன் மூலம் ஒரு பெருந்தொற்று அபாயத்துக்கு மத்தியில் முரண்பாடுகளை களைந்து, தேர்தல் எனும் ஜனநாயக திருவிழாவை எப்படி நடந்த வேண்டும் என்பதற்கு தென்கொரியா முன்மாதிரியாக …