உலகம் முழுவதும் மருத்துவ ஊழியர்கள் 22 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனிவா: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 17 லட்சத்து 76 ஆயிரத்து 936 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 66 ஆயிரத்து 189 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு உள்ளானவர்களில் …
கொரோனாவில் இருந்து மீண்ட 4 லட்சம் பேர்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 4 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஜெனிவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் …
10 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை – அதிர்ச்சியில் உறைந்த இங்கிலாந்து
இங்கிலாந்து நாட்டில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 917 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. லண்டன்: சீனாவில் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 17 லட்சத்து 75 ஆயிரத்து 586 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 558 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா …
ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி… புதிதாக 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று – அலறும் அமெரிக்கா
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், புதிதாக 30 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நியூயார்க்: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 17 லட்சத்து 79 ஆயிரத்து 99 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 67 ஆயிரத்து 620 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் …
கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல்
கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) ஒப்புதல் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முறை தொடர்பான நடைமுறைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த நோயாளியின் ரத்தத்தில், அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்தின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். எனவே அவரது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தனியாக பிரித்து எடுத்து, அதை மிகவும் ஆபத்தான …
சீன தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு தடை- அமெரிக்கா எச்சரிக்கை
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக ‘சீனா டெலிகாம்’ நிறுவனத்துக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு எச்சரித்துள்ளது. வாஷிங்டன்: சீனாவின் அரசுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான ‘சீனா டெலிகாம்’ அமெரிக்காவிலும் தொலைத்தொடர்பு சேவை அளிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ‘சீனா டெலிகாம்’, ‘சீனா யூனிகாம்’ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் குற்றம் சாட்டினார். இதையடுத்து இது …
பூனைகளுக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் – சீன ஆய்வில் தகவல்
மனிதர்களுக்கு மட்டுமின்றி பூனைகளையும் கொரோனா வைரஸ் தாக்கும் என்று சீன ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. உலகம் முழுவதும் மனித உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு விலங்குகளும் தப்பவில்லை. அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் நாடியா என்ற பெண் புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த புலிக்கு பராமரிப்பாளர் மூலம் வைரஸ் பரவி தாக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பான ஆராய்ச்சியில் சீனா இறங்கியது. …
பாகிஸ்தானுக்கு கூடுதல் மருத்துவப் பொருட்களை அனுப்பி வைத்த சீனா
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக சீன அரசு கூடுதல் மருத்துவப் பொருட்களை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளது. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4700ஐ தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 190 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நட்பு நாடான சீனா உதவி வருகிறது. மருந்துகள், முக கவசங்கள், கவச உடைகள் உள்ளிட்ட …
அமெரிக்க நாட்டில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது
அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்தது. நியூயார்க், கொரோனா வைரஸ், உலகின் பிற நாடுகளை விட வல்லரசு நாடான அமெரிக்காவில்தான் ருத்ர தாண்டவமாடி வருகிறது. இதனால் அந்த நாட்டின் 50 மாகாணங்களிலும் பேரழிவு பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. உலகளவில் என்று பார்த்தால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை நோக்கி செல்கிறது. 22 கோடி மக்கள் தொகையில் 97 சதவீத மக்கள் வீடுகளில் அடைபட்டுக் கிடந்தாலும், …
விஜய் மல்லையாவுக்கு திவால் நடவடிக்கையில் இருந்து நிவாரணம் – லண்டன் கோர்ட் தீர்ப்பு
இந்திய வங்கிகளிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடிக்கு அதிகமாக கடன் வாங்கி விட்டு திருப்பிச்செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிய விஜய் மல்லையாவுக்கு திவால் நடவடிக்கையில் இருந்து நிவாரணம் வழங்கி லண்டன் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. லண்டன், பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா (வயது 64). கிங் பிஷர் குழும நிறுவனங்களின் தலைவரான இவர், இந்திய ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 12 பொதுத்துறை வங்கிகளில் 1.145 பில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.10 ஆயிரத்து 830 கோடி) கடன் வாங்கிவிட்டு …