பீஜிங்: சீனாவில் அறிகுறிகள் இல்லாமல் புதிதாக 1541 பேருக்கு ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நாட்டு மக்களை பீதியடைய செய்துள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய சீனாவில் 81 ஆயிரத்து 554 பேர் பாதிக்கப்பட்டனர்; அதில் 3312 பேர் உயிரிழந்தனர். 76 ஆயிரத்து 238 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். இப்படி மோசமான பாதிப்புகளை சந்தித்த சீனா பல …
கொரோனா வைரஸ் பாதிப்பு:கிழக்கு ஆசியாவில் 1.10 கோடி மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் -உலக வங்கி
கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார வீழ்ச்சி காரணமாக, கிழக்கு ஆசியாவில் 1.10 கோடி மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. லண்டன் சீனாவின் உகான் நகரில் தொடங்கிய வைரஸ் இன்று உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் கூட பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியினால் கிழக்கு ஆசியாவில் 1.10 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி …
அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது
டிரம்பின் அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் ஆகியவற்றால் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாஷிங்டன் உலக அளவில் கொரோனா வைரசுக்குப் பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 42,130 பேரை கொரோனா வைரஸ் பலியாக்கியிருக்கிறது. அதே போல் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,57 லட்சத்தைக் கடந்துள்ளது. சுமார் 1,77 ஆயிரம் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இத்தாலியில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. …
2-ஆம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் சவாலான நெருக்கடியாக கொரோனா தொற்று உள்ளது: ஐ.நா தலைவர்
2-ஆம் உலகப் போருக்கு பின்னர் மிகவும் சவாலான நெருக்கடியாக கொரோனா தொற்று உள்ளது என்று ஐநா தலைவர் கூறினார். ஜெனீவா, உலக நாடுகள் முழுவதையும் தற்போது கொரோனா வைரஸ் ஒரு சேர பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது உலக வல்லரசு நாடான அமெரிக்கா என்பதிலிருந்தே, அந்த நோயின் தீவிரத்தை உணர முடியும். வளர்ந்த நாடுகளில் மிகப்பெரும் தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. வளர்ந்து வரும் நாடுகளும் கொரோனாவின் பிடியிலிருந்து தப்பவில்லை. இந்த சூழலில், 2 …
கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது.தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணித்து உள்ளார். லாஸ்ஏஞ்சல்ஸ் கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் உகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 721,412 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 33,956 பேர் உயிரிழந்துள்ளனர். 151,004 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும், வேதியலுக்கான …
கொரோனா சிகிச்சைக்கு 3 மருந்துகள் தயார் – ரஷியா தகவல்
கொரோனா வைரசை குணப்படுத்த வாய்ப்புள்ள 3 மருந்துகள் தயாராக இருப்பதாக ரஷிய விஞ்ஞான அகாடமியின் துணைத்தலைவரும், உயிரி மருத்துவ அறிவியல் பிரிவின் தலைவருமான விளாடிமிர் செகோனின் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:- மாஸ்கோ, ரஷிய விஞ்ஞான அகாடமியின் கிளையில் பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதை கொரோனாவை குணப்படுத்த பயன்படுத்தலாமா என்று சீன விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். தற்போது, வைரஸ் சுவாச தொற்றை குணப்படுத்துவதற்கான ஒரு விசேஷ இன்ஹேலர் தயாராக …
‘கொரோனா’வால் இந்திய, சீன பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாது: ஐ.நா அறிக்கை
புதுடில்லி: கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலக பொருளாதாரம் இந்த ஆண்டு மந்தநிலைக்குச் செல்லும் எனவும் இந்தியா மற்றும் சீனாவைத் தவிர வளரும் நாடுகளுக்கு, இது கடுமையான சிக்கலைக் கொடுக்கும் எனவும் ஐ.நா.வின் சமீபத்திய வர்த்தக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் இவ்வறிக்கையால், இந்திய பங்குச் சந்தைகள் இன்று (மார்ச் 31) ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின. கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகின் 200 நாடுகளை பரவியுள்ளது. உலகளவில் 1.6 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். …
கரோனா 1 லட்சத்தைத் தாண்டிய பாதிப்பு; 11 ஆயிரத்தைத் தாண்டிய பலி: திணறும் இத்தாலி
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இத்தாலியில் பலியானோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டி 11,591 ஆக உள்ளது. கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையாகப் போராடி வருகின்றன. சீனாவில் தொடங்கி 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளைப் பாதித்துள்ள கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இத்தாலி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கரோனா வைரஸ் நோயத் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை பாதித்தோரின் எண்ணிக்கை 1,01,739 ஆக உள்ளது. …
கொரோனா வைரஸ்: இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் நிலைமை என்ன ?
மார்ச் 26ஆம் தேதிவரை தெற்காசிய பிராந்தியத்தில் 2,081 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 92 சதவீதத்தினர் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாவர். தெற்காசிய பிராந்தியத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள நாடாக பாகிஸ்தான் உள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து இதே நிலைமை இல்லை. அதாவது, இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஜனவரி 30ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில், …
மூன்றாம் உலகப் போர் “கரோனா’!
” கரோனா என்னும் மூன்றாம் உலகப்போரை எதிர்த்து நடக்கும் இந்த யுத்தத்தில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் காப்பீடு வரவேற்கத்தக்கது. பணியின்போது அவர்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். ” கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பது எப்படி? இந்நோய்க்கு எப்படி வைத்தியம் செய்வது? இதனால் எவ்வளவு உயிரிழப்புகள் ஏற்படப் போகின்றன என்பதையெல்லாம் அறிய முடியாமல் மிகப் பெரிய கலக்கத்திலும், பேரச்சத்திலும் மக்கள் ஆழ்ந்திருக்கிற நேரமிது. ஏற்கெனவே, கரோனா நோய்த்தொற்று 190-க்கும் …