துபாய்:கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகம் முழுவதும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை சரிந்தது. இந்நிலையில் ரஷ்யா, பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் சவுதி அரேபியா ஒப்பந்த குழுவிலிருந்து வெளியேறிவிட்டதாக கூறிவந்தது. இதைதொடர்ந்து சவுதி அரேபியா, ரஷ்யாவின் நிலையை கண்டித்துள்ளது. இதற்கிடையே பெட்ரோல் உற்பத்தியாளர்கள் அவசர கூட்டத்திற்கு முன்னதாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது, மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல் விலை கடுமையாக சரியத் தொடங்கியது. கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 24 டாலராக …
கொரோனாவுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் 15 பேர் பலி
வாஷிங்டன்: கொரோனாவுக்கு அமெரிக்காவில் 6 இந்தியர்கள் உட்பட உலகம் முழுவதும், 15 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். கொடிய ‘கொரோனா’ வைரஸ், உலகம் முழுவதும் பரவி உயிர் பலி வாங்கி வருகிறது. உலகளவில் இதுவரை 11.88 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 64,103 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 15 பேர் கொரோனா தாக்கி பலியாகி உள்ளது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் 6 இந்தியர்களும், இத்தாலியில் 5 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்சில் 2 பேர், ஈரான், …
செப்டம்பர் வரை இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்: ஆய்வில் தகவல்
புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,500-ஐ கடந்துள்ளது. சமூக பரவலை தடுக்க ஏப்.,14 வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஏப்.,14க்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து, ஊரடங்கு செப்டம்பர் வரை நீட்டிக்கப்படலாம் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. பிஸினஸ் டுடே மற்றும் மணி கண்ட்ரோல் தளத்தில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்க ஆய்வு நிறுவனமான பாஸ்டன் ஆலோசனை குழு, ஒவ்வொரு நாடுகளிலும் …
கரோனா தொற்று இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்படாத நாடுகள் உள்ளன
உலகம் முழுவதும் கொரோனா கோரதாண்டவம் ஆடி வரும் நிலையிலும் கொரோனாவை பற்றி தெரியாத நாடுகள், கண்டு கொள்ளாத நாடுகள் உள்ளன சியோல் கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் நடுங்கி வரும் நிலையில், இந்த வைரஸ் காரணமாக ஒருவர் கூட பாதிக்கப்படாத நாடுகளும் உள்ளது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகையே மிரட்டி வரும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் இருக்கிறது. இந்த வைரஸ் காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 39,566 பேர் …
ஆண்களை குறிவைத்து தாக்கும் கொரோனா வைரஸ்
சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து உருவான கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளை பாதித்துள்ளது. உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டு உள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். பலியானவர்களில் பாலின விகிதம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் பெண்களை விட ஆண்கள் மூன்று மடங்கு பலியாவதாக கண்டறியப்பட்டுள்ளது. உயிர்பலியாகும் பெண்களின் எண்ணிக்கை 3.4 சதவீதமாக இருக்கும்பட்சத்தில் ஆண்களின் பலி எண்ணிக்கை 9.2 ஆக காணப்படுகிறது. இது தவிர கொரோனா பாதித்த இத்தாலி, ஸ்பெயின், …
சிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு; பிரதமர் அறிவிப்பு
சிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். சிங்கப்பூர், சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கையாக வரும் 7ந்தேதி முதல் அடுத்த 1 மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என அந்நாட்டின் பிரதமர் லீ சீன் லூங் அறிவித்து உள்ளார். அதனால் அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதார பிரிவுகளை தவிர்த்து பெருமளவிலான பணியிடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு …
இத்தாலியில் குறைந்து வரும் கொரோனாவின் வேகம்
ரோம் : இத்தாலியில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தற்போது ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் பரவிய கொரோனா சீனாவையடுத்து பல நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. இதில் இத்தாலியில் பாதிப்பு சற்று அதிகமாகவே இருந்து வந்தது. தினமும் ஆயிரக் கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் …
கரோனாவுக்கு அமெரிக்காவில் மருந்து கண்டுபிடிப்பு!
புதிதாக கரோனா வைரஸ் தடுப்பு மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை எலிகளுக்குச் செலுத்திப் பரிசோதித்துப் பார்த்ததில் நல்ல எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தியிருப்பது அறியப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான இந்த ஆய்வின் முடிவு பற்றி இபயோமெடிசின் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பிட்கோவேக், அதாவது பிரிட்ஸ்பர்க் கரோனா வைரஸ் வேக்சின், என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த மருந்தை எலிகளுக்குச் செலுத்திப் பரிசோதித்ததில், கரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு ஆற்றலை இரு வாரங்களிலேயே அவை மிக அதிகளவில் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. கரோனா …
ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிவருகிறது. தற்போது வரை, 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும், 10 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில், 2.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பல லட்சம் மக்கள் வேலையிழந்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. அடுத்த வேளை உணவுக்கு கூட வழியற்ற சூழலில், பல குடும்பங்கள் தவித்து …
ஊரடங்கு மீறுபவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர்
ஊரடங்கு மீறுபவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மணிலா, சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தெற்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சிலும் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. பிலிப்பைன்சில் தற்போதைய நிலவரப்படி 2,633 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 107 பேர் மீண்ட நிலையில், 51 – பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில், …