தமிழகத்தில் 8.20 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என முதல் அமைச்சர் பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, தமிழகத்தில் 96.30 சதவீதம் பேருக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 3 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். 73 ஆயிரம் பேருக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது.
நலவாரிய தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழகத்தில் 8.20 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்.
சென்னையில் பணியின்பொழுது மரணம் அடைந்த காவலர் அருண்காந்தி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும். அவரது குடும்பத்தில் தகுதியான நபர் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும். களப்பணியாற்றும் அலுவலர்கள் உயிரிழந்து விட்டால் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
சோதனை காலத்திலும் அரசு பணியாளர்கள் சிறப்புடன் செயல்படுகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2வது நிலையில் இருந்து 3வது நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் என்பது கூட்டு பொறுப்பு ஆகும் என கூறியுள்ளார்
Leave a Reply