53 நாடுகளில் 3,300 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் 53 உலக நாடுகளில் 3,336 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. வெளிநாடுகளில் கொரோனா வைரசுக்கு 25 இந்தியர்கள் பலியாகியும் உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பெரிய அளவில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க முடியாத சூழல் உள்ளது; எனவே அவர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று அந்த வட்டாரங்கள் கேட்டுக்கொண்டன. வணிக அடிப்படையிலும், மானியமாகவும், 55 உலக நாடுகளுக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகளை தென்கொரியா மற்றும் சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்வதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து மருத்துவ சாதனங்களை வாங்கவும் இந்தியா எண்ணி இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *