புதுடில்லி: இந்தியாவில் 325 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டில்லியில் நிருபர்களை சந்தித்த சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் கூறியதாவது:
இந்தியாவில் 325 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. உலக சுகாதார அமைப்பினருடன் நேற்று சுகாதார அமைச்சர், இணையமைச்சர் ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம், கொரோனா தடுப்பு மற்றும் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். புதுச்சேரியின் மாஹேயில் கடந்த 28 நாட்களாக கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் இல்லை. கடந்த 24 மணிநேரத்தில் 941 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 37 பேர் உயிரிழந்துள்ளனர் எனக்கூறினார்.
ஐசிஎம்ஆர் அமைப்பின் ராமன் ஆர்.கங்காகேத்கர் கூறுகையில், இந்தயாவில், இதுவரை 2,90,401 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், நேற்று மட்டும் 30, 043 பரிசோதனைகள் நடந்தன. அதில், ஐசிஎம்ஆருக்கு சொந்தமான 176 ஆய்வகங்களில் ஆய்வகத்தில், 26,331 பரிசோதனைகளும், 3,712 பரிசோதனைகள் தனியார் ஆய்வகங்களிலும் நடந்துள்ளது. விரைவாக சோதனை நடத்துவதற்காக ரேபிட் டெஸ்ட் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியா வந்துள்ளது. ஜப்பானில் 11 பேரையும், இத்தாலியில் 6 பேரையும், பிரிட்டனில் 3 பேரையும், அமெரிக்காவில் 5 பேரையும் பரிசோதனை செய்யும் போது ஒருவருக்கு கொரோனா உறுதியாகிறது. ஆனால், இந்தியாவில் 24 பேரை பரிசோதனை செய்யும் போது ஒருவருக்கு கொரோனா உறுதியாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply