2020-21ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் படிவங்களை திருத்தி அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக நேரடி வரிகள் விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தொற்று தற்போது வேகமாக பரவி வருவதால், வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் மார்ச் 31-ம் தேதியில் இருந்து ஜூன் 30-ம் தேதி ஆக நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரை மேற்கொள்ளப்படும் வரிசலுகைக்கான முதலீடுகள் மற்றும் பரிவர்த்தனைகளை சேர்த்துக் கொள்ள ஏதுவாக திருத்தி அமைக்கப்படும் வருமான வரி தாக்கல் படிவங்கள், வரும் மே மாதம் 31-ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
Leave a Reply