சென்னை: இரும்பு, சிமெண்ட், மருந்து, உரம் உள்ளிட்ட 12 வகையான தொழிற்சாலைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் 12 வகையான தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இரும்பு, சிமெண்ட், சுத்திகரிப்பு. சர்க்கரை, காகிதம், ரசாயனம், ஜவுளித்துறை, உரம், உருக்கு, கண்ணாடி, ஃபவுண்டரி உட்பட 12 துறைகளை சேர்ந்த தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Leave a Reply