சென்னை:

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளன. உணவு, பால், மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு எந்த தடையும் இல்லை. எனினும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு சலுகைகள் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதற்கான பயன்பாட்டு கட்டணம் ஏப்ரல் 30 வரை வசூலிக்கப்படாது.

காய்கறிகள் மற்றும் பழங்கள் சேகரித்து விநியோகம் செய்ய முன்வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். வியாபாரிகள் சந்தை கட்டணத்தை வரும் 30ம் தேதி வரை செலுத்த வேண்டியதில்லை.

காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய 500 நடமாடும் வாகனங்கள் ஏற்படுத்தப்படும்.

விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை விற்பனை செய்வதில் உதவிட அவசரகால தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வியாபாரிகளை தொடர்பு கொள்ளுதல், சரக்கு போக்குவரத்து அனுமதி, குளிர்சாதன கிடங்கு போன்ற சேவைகளுக்கு இந்த எண்களில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

விவசாயிகள் 044-22253884, 22253883, 22253496, 95000 91904 என்ற எண்களை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *