வங்கிகளுக்கு வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான மாத தவணைகள் செலுத்தாவிட்டால் கூடுதல் வட்டி கட்ட வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
வங்கிகளுக்கு 3 மாத தவணை செலுத்தாவிட்டால் கூடுதல் வட்டி கட்ட வாய்ப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் நோக்கத்தில் ரிசர்வ் வங்கி பல்வேறு சலுகைகளை அறிவித்தது.
வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், கார்ப்பரேட் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான மாத தவணைகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தது. இதன் மூலம் 3 மாதங்கள் மாத தவணைகளை செலுத்த தேவையில்லை என்று வங்கிகள் அறிவித்துள்ளன.
ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆப் பரோடா, இந்தியன் வங்கி, பஞ்சாய் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், ஐ.டி.பி.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் 3 மாத தவணை குறித்து தங்களது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளன.
இந்த 3 மாத தவணையை செலுத்தாமல் இருக்க சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு நாம் நேரில் சென்று கடிதம் கொடுக்க வேண்டும். அல்லது வங்கியின் இணைய தளத்திற்கு சென்று 3 மாத அவகாசம் வேண்டும் என்று வங்கி வாடிக்கையாளர் இ.மெயில் ஐ.டி.யில் இருந்து வங்கிகளுக்கு மெயில் அனுப்ப வேண்டும். அல்லது வங்கிக்கு போன் செய்து தகவல் தெரிவிக்க வேண்டும்.
ரூ.2 லட்சம் வரை கடன் வாங்கியவர்களுக்கு இந்த மாத தவணை திட்டம் பலன் உள்ளதாக இருக்கும். ஆனால் அதிக கடன் வாங்கியவர்களுக்கு இந்த மாத சலுகை பயன் அளிக்காது. அவர்கள் கூடுதல் வட்டியும், கூடுதல் மாத தவணை தொகையும் செலுத்த வேண்டியதிருக்கும்.
ரூ.30 லட்சம் கடன் வாங்கியவர்கள் 3 மாதம் தவணை செலுத்தாவிட்டால் ரூ.2 லட்சத்து 50 வரை வட்டியாக செலுத்த வேண்டியதிருக்கும். எனவே பணம் இருப்பவர்கள் இந்த மாத தவணை தொகையை கட்டி விடுவது நல்லது.
Leave a Reply