மார்ச் 14 முதல் 20-ந்தேதி வரை டெல்லியில் இருந்து தமிழகம் வந்த ரெயில்களில் பயணம் செய்தவர்கள், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தெற்கு ரெயில்வே பாதுகாப்புப்படை கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை,

தெற்கு ரெயில்வே பாதுகாப்புப்படை கமிஷனர், சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

டெல்லியில் உள்ள நிஜாமுதீனில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் இவர்கள் பயணம் செய்த ரெயில்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அந்த ரெயில்களில் அவர்களுடன் பயணம் செய்த பயணிகள், ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இது பரவும் அபாயம் உள்ளது.

ரெயில்கள் விவரம்

அதனால் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் பயணம் செய்த ரெயில்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கீழ்க்கண்ட ரெயில்களில் பயணம் செய்தவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ரெயில்கள் விவரம் வருமாறு:-

* ஹஸ்ரத் நிஜாமுதீன்-சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்(வண்டி எண்: 12270) டொரண்டோ எக்ஸ்பிரஸ், விஜயவாடா-சென்னை சென்டிரல்(12078) பயணிகள் ரெயில், ஜம்மு-நெல்லை(16318) ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், டெல்லி-திருவனந்தபுரம்(12626) கேரளா எக்ஸ்பிரஸ், டேராடூன்-மதுரை (12688) எக்ஸ்பிரஸ், டெல்லி- சென்னை சென்டிரல்(12622) தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா-சென்னை சென்டிரல்(16032) அந்தமான் எக்ஸ்பிரஸ், ஹஸ்ரத் நிஜாமுதீன்-எர்ணாகுளம்(12646) மெல்லினம் எக்ஸ்பிரஸ், ஹஸ்ரத் நிஜாமுதீன்-சென்னை சென்டிரல்(12434) ராஜ்தானி எக்ஸ்பிரஸ், ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா-நெல்லை(16688) நவயுகா எக்ஸ்பிரஸ், ஹஸ்ரத் நிஜாமுதீன்-திருவனந்தபுரம்(12644) ஸ்வர்ண ஜெயந்தி எக்ஸ்பிரஸ், ஹஸ்ரத் நிஜாமுதீன்-கோவை(12648) கொங்கு எக்ஸ்பிரஸ், டெல்லி- சென்னை சென்டிரல்(12616) கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *