மும்பை: இந்தியாவில் கொரோனா பரவ துவங்கியுள்ள நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இதுவரை நோய் தொற்றால் 868 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். மொத்தம் 52 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் மஹாராஷ்டிரா, கொரோனா பாதிப்பை பொறுத்த வரை தொடர்ந்து நாட்டில் முதலிடத்தில் இருந்து வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க கடந்த 13 நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 120 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். ஒரே நாளில் 7 பேர் புதிதாக மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
மும்பையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 68 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மும்பை நகரில் மட்டும் இதுவரை 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநிலத்தில் புதிதாக பலியானவர்கள் 7 பேரும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளாதவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply