சகோதரர்களே, மனித இனமாகிய நமக்கு இந்த கொரோனோ வைரஸ் எழுதிய கடிதத்தை தயவுசெய்து நிச்சயம் படியுங்கள்:-

மனிதர்களுக்கு என் அன்பு மடல்!!!
—————————————————————
உங்களை அழிப்பது எப்போதும்
என் நோக்கமல்ல,
விஞ்ஞானம் வளர்ந்து விட்டது,
தொழில் நுட்பம் தலை சிறந்து விளங்குகிறது,
மருத்துவம் மகத்தான நிலையை அடைந்து விட்டது, ஆகவே
இயற்கையை விட மனித இனமே உயர்ந்தது என்கிற உங்களின் அகந்தையை அழிப்பதே
என் நோக்கம் !!!

எண்ணற்ற போர் விமானங்களை தயாரித்தீர்கள்,
எத்தனையோ கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கினீீர்கள்,
அதில் ஏதேனும் ஒன்றை ஏவியாவது என்னை கொன்று விடுங்கள் பார்க்கலாம்!!!

அணுகுண்டு வைத்திருக்கும்
நாடு நாங்கள்,
யாரை வேண்டுமானாலும்
அழித்து விடுவோம் என்று கர்வத்தோடு பேசி திரிந்தீர்களே!!!
ஆயிரம் அணுகுண்டை வீசியாவது இப்பொது என்னை அழித்து காட்டுங்கள் பார்க்கலாம்!!!

சாதியின் பெயரை சொல்லி உங்களை நீங்களே பிரித்து வைத்தீர்கள்,
ஆனால் உலகையே ஆண்ட
பிரிட்டிஷ் நாட்டின் இளவரசனையும்
ஒரு வேளை சோற்றுக்கே
வழி இல்லாத பாமரனையும்
நான் சமமாய் நடத்துகிறேன் ….
ஆகவே உங்களை விட
நான் மேன்மையானவனே!!!
என்னை இகழ உங்களுக்கு
ஒரு தகுதியும் இல்லை…

மதங்களின் பெயரை சொல்லி உங்களை நீங்களே கொன்று குவித்தீர்கள்,
மதத்தின் பெயரை சொல்லி
பிழைப்பை நடத்தும் யாரேனும் ஒருவரை
இப்போது அழைத்து
பூஜை செய்தோ,
வேதம் படித்தோ,
மந்திரம் ஓதியோ
என்னை மறைய செய்யுங்கள் பார்க்கலாம்!!!
இனியேனும் இது போன்ற
மனித வைரஸ்களிடம்
மாட்டிக் கொள்ளாமல்
சுய அறிவோடு இருங்கள்…

இந்த பூமியில் உள்ள உங்கள் அனைவருக்கும் நான் அளித்திருக்கும் **அன்பு பரிசு தான்
இந்த “”தனிமை””**
அதில் சிறிது காலம்
வாழ்ந்து பாருங்கள்!!!
ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்கிற ஏற்றத் தாழ்வுகளை துறந்து மனிதத்தை உணர்ந்து
புதிய சிந்தனைகளோடு
வெளியே வாருங்கள் …

அப்போது நான் உங்களை விட்டு நிரந்தரமாய் விடை பெற்றிருப்பேன்!!!

இப்படிக்கு,

கொரோனா?

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *