ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு 200 லிட்டர் டீசல், 200 லிட்டர் பெட்ரோலை இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கியுள்ளது.

போலீசார் ரோந்து பணிக்கு 200 லிட்டர் பெட்ரோல் – டீசல்

பாகூர்:

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கை அமல்படுத்தும் தீவிர பணியில் உள்ள போலீசார் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் இருந்து வருகிறது. இந்த நிலையில் போலீசார் மோட்டார் சைக்கிள்களுக்கும், ஜீப்களுக்கும் இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனம் பெட்ரோல், டீசல் வழங்க முன் வந்தது.

கிருமாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு 200 லிட்டர் டீசல், 200 லிட்டர் பெட்ரோல் இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கியது. சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் முள்ளோடையில் கிருமாம்பாக்கம் போலீசாருக்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வழங்கலுக்கான ரசீதை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா, இன்ஸ்பெக்டர்கள் பாபுஜி, தனசேகரன், சப்இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, இந்தியன் ஆயில் நிறுவன புதுச்சேரி கிளை விற்பனை அதிகாரி வனலரசு, பெட்ரோல் பங்க் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் இருந்தனர்.

அப்போது, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அலுவால், இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனம் போன்று மற்ற நிறுவனங்களும் அந்தந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு உதவ முன் வர வேண்டும் எனகேட்டுக் கொண்டார்.

பின்னர் எல்லைப்பகுதியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் அப்பகுதியில் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், மருத்துவ குழுவினருக்கு அவர் இரவு உணவு வழங்கி அவர்களுடன் உணவறிந்தினார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *