ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்கள், மாவட்டங்கள் இடையேயான போக்குவரத்துக்கு தடை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு வி‌ஷயங்களுக்கு தொடர்ந்து தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அனைத்து பகுதிகளிலும் சமூக விலகல் திட்டம் தொடர்ந்து நீடிக்கும்.

* மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி இல்லை.

* மாநிலங்கள், மாவட்டங்கள் இடையேயான போக்குவரத்துக்கு தடை நீடிக்கும்.

*ஆட்டோ-வாடகை கார்கள் இயங்க தடை நீடிக்கும்.

* பஸ், விமானம், ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்தை தொடங்க அனுமதி இல்லை.

* கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

* சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் தொடர்ந்து மூடப்படும்.

* அரசியல் நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களுக்கு தடை நீடிக்கும்.

* பயிற்சி நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை. பொது நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *