மனிதர்களுக்கு மட்டுமின்றி பூனைகளையும் கொரோனா வைரஸ் தாக்கும் என்று சீன ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
உலகம் முழுவதும் மனித உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு விலங்குகளும் தப்பவில்லை.
அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் நாடியா என்ற பெண் புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த புலிக்கு பராமரிப்பாளர் மூலம் வைரஸ் பரவி தாக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பான ஆராய்ச்சியில் சீனா இறங்கியது. இதில் கொரோனா வைரசுகளை செறிவூட்டி அவற்றை நாய், பூனை, கோழி, வாத்து, பன்றி ஆகிய உயிரினங்களுக்கு ஊசி மூலம் செலுத்தி சோதனை செய்தது.
பின்னர் சில நாட்கள் கழித்து அந்த விலங்குகளை பரிசோதனை செய்தபோது பூனைக்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.
மனிதர்களுக்கு மட்டுமின்றி பூனைகளையும் கொரோனா வைரஸ் தாக்கும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் பூனையிடம் இருந்து கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா? என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இது தொடர்பான ஆராய்ச்சி நடந்து வருவதாக சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply