கோல்கட்டா: பிரதமர் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும் என நேற்று பிரதமர் மோடி கொரோனா தொடர்பாக வெளியிட்ட வீடியோ குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
நேற்று பிரதமர் மோடி வீடியோ மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில் ‘கொரோனா வைரசை தோற்கடிக்க நாளை (ஏப்.5ம் தேதி) இரவு, 9:00 மணிக்கு, 9 நிமிடங்கள், மக்கள் அனைவரும் மின் விளக்குகளை அணைத்து, தீபம், டார்ச் லைட், மெழுகுவர்த்தி, மொபைல் போன் விளக்கு களை ஒளிரவிட்டு, நம் வலிமையை காட்ட வேண்டும்,” என, பிரதமர், மோடி பேசினார்.
இது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது, பிரதமரின் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும். இதை வைத்து நான் ஏன் அரசியல் செய்ய வேண்டும். இதை ஏன் நீங்கள் அரசியலாக்க முயற்சிக்கிறீர்கள். தயவுசெய்து அதை செய்ய வேண்டாம் என்றார்.
Leave a Reply