பிரதமர் மோடி அழைப்பு விடுத்த, விளக்கேற்றும் நிகழ்வுக்கான நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றும்பொழுது, வருகிற 5ந்தேதி (நாளை) இரவு 9 மணிக்கு உங்கள் இல்லங்களில் எரியும் அனைத்து விளக்குகளையும் அணைத்து விடுங்கள். உங்கள் வீட்டின் வாசற்படியில் இருந்தோ அல்லது பால்கனியில் இருந்தோ, ஒளியேற்றப்பட்ட மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச் லைட் அல்லது உங்கள் மொபைல் போனின் டார்ச் ஒளியை ஏந்தி 9 நிமிடங்கள் நில்லுங்கள் என கூறினார்.
இந்த நிகழ்வுக்கான நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்பொழுது, மருத்துவமனை, பேருந்து நிலையங்கள் மற்றும் தெரு விளக்குகள் ஆகியவை கட்டாயம் ஒளிர வேண்டும்.
தொலைக்காட்சி பெட்டி, குளிர் சாதனப்பெட்டி, மின்விசிறி உள்ளிட்ட மின் சாதனங்களை அணைக்க தேவையில்லை என்றும் மத்திய மின் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Leave a Reply