புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிவாரண நிதி வழங்கும் நிறுவனங்களுக்கு, கம்பெனிகளின் சட்டங்களின் கீழ் சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கான பிரிவில் செலவிட்டதாக கருதப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி அளிக்கும்படி, நாட்டு மக்களுக்கு பிரதமர், மோடி, வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, ஏராளமான பிரபலங்கள், நிறுவனங்கள் தாராளமாக நிதி உதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நிவாரண நிதியை அதிகரிக்க, மத்திய அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, நிவாரணமாக நிறுவனங்கள் அளிக்கும் நிதி உதவி, கம்பெனிகளின் சட்டங்களின் கீழ், சமூக நல செலவாக கருதப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விதி என்ன?
லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள் 3 ஆண்டுகள் வருவாயில், சராசரி நிகர லாபத்தில் 2 சதவீதம், ஒரு குறிப்பிட்ட நிதி ஆண்டில், சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு செலவிட வேண்டும் என்பது கம்பெனிகள் சட்டத்தின் விதியாக உள்ளது.
Leave a Reply