பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க விளக்கேற்றி ஒளிமயமான வாழ்வுக்கு வழிவகுப்போம் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க ஆக்கப்பூர்வமான முறையிலே நடவடிக்கை எடுத்து வருவது நமக்கெல்லாம் நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்போதைய இந்தியாவுக்கு தேவை தனித்திரு, விழித்திரு, கொரோனாவை ஒழித்திடு. பிரதமர் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஏற்கனவே டிவி, ரேடியோ மூலம் பேசியது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதன்படி கடந்த மாதம் 22-ந்தேதி பிரதமர், கைத்தட்ட கேட்டுக்கொண்டது ஒற்றுமையின் அடையாளம். நாளை (இன்று) விளக்கேற்ற கேட்டுக்கொண்டது நம்பிக்கையின் அடையாளம். ஆக நாம் ஒற்றுமையோடு செயல்படுவோம், நம்பிக்கையோடு செயல்படுவோம். இந்த சோதனையான காலத்தில் இருந்து மீண்டு வருவோம். ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கான காலம் இது. விமர்சனத்துக்கும், அரசியலுக்கும் இது நேரமல்ல. தொடர்ந்து பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாளை (இன்று) இரவு 9 மணிக்கு விளக்கேற்றி ஒளிமயமான வாழ்வுக்கு வழி வகுப்போம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Leave a Reply