பாகிஸ்தானில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 117 பேர் பலியாகி உள்ளனர்.
இஸ்லாமாபாத்:
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்ததையடுத்து ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 6297 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 117 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்ட 1446 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றால் பஞ்சாப் மாகாணம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் 3016 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சிந்து மாகாணத்தில் 1688 பேருக்கும், கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் 912 பேருக்கும், பலூசிஸ்தானில் 281 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply