தாய்-சேய் நலன் மற்றும் நீண்டகால நோய்க்கு தொடர் சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் ஆஸ்பத்திரிகளின் பதிவு ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

சென்னை,

இதுகுறித்து தமிழக மருத்துவ மற்றும் ஊரக மருத்துவ சேவை இயக்குனர், மாவட்ட கலெக்டர்கள், மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநிலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளும், குழந்தை பிறப்பு, தாய்-சேய் நலன் போன்ற தொடர் மருத்துவ சேவையை பராமரிக்க வேண்டும். நீண்டகால நோய்களுக்கான சிகிச்சையான டயாலிசிஸ், கீமோதெரபி மற்றும் நரம்பியல் தொடர்பான சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும்.

ஆனால் இந்த மருத்துவ சேவைகள் மறுக்கப்படுவதாக சம்பந்தப்பட்ட அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இது தொழில் நெறிமுறைகளுக்கு முரணானது மட்டுமல்ல, இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளுக்கும் முரண்பட்டதாகும். இதுபோன்ற மருத்துவ சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மூடப்படக்கூடாது. தொடர்ந்து அவர்களிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த சேவையை ஆற்ற வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்படுவது கண்டிப்புடன் பார்க்கப்படும். மருத்துவ சேவைகளை அளிக்காத ஆஸ்பத்திரிகள் மீது, ஆஸ்பத்திரி நிறுவனங்கள் சட்டத்தின்படி, அதன் பதிவை ரத்து செய்யும் அளவுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *