தரமற்ற பொருட்கள் ஏற்றுமதி விமர்சனம் : சீனா கடுமையான தரக்கட்டுப்பாடு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புதுடெல்லி:
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், வெளிநாடுகளின் தேவைக்காக மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியை சீனா அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் 1-ந் தேதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 386 கோடி முக கவசங்கள், 3 கோடியே 75 லட்சம் கவச உடைகள், 16 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள், 21 லட்சம் சோதனை கருவிகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்துள்ளது.
ஆனால், சீன உபகரணங்கள் தரமற்றவையாக இருப்பதாக நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகள் புகார் தெரிவித்துள்ளன. 6 லட்சம் முக கவசங்களை நெதர்லாந்து திருப்பி அனுப்பியது. ஆயிரக்கணக்கான சோதனை கருவிகளை ஸ்பெயின் நிராகரித்தது.
ஜார்ஜியா தனது உத்தரவை ரத்து செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதே நேரத்தில் மலேசியா சீனாவுக்கு பதிலாக தென் கொரியாவிலிருந்து மூல பொருட்களை தேர்வு செய்துள்ளது,.
தரமற்ற சோதனை கருவிகள் மற்றும் முகமூடிகள் ஸ்பெயின், இங்கிலாந்து, செக் குடியரசு, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்லோவாக்கியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் சீன பொருட்கள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டன.
வெளிநாடு தரமற்ற சோதனைக் கருவிகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக ஏற்பட்ட மோசமான விளம்பரத்தில் சிக்கியுள்ள சீனா, இந்தியா உள்பட உலகம் முழுவதும் அனுப்பப்படும் புதிய ஏற்றுமதி பொருட்களுக்கு கடுமையான தரக் கட்டுப்பாட்டைத் தொடங்கியுள்ளது. ஒப்பந்தங்களை கையாள தகுதியான முன் சோதனை செய்யப்பட்ட நிறுவனங்களை தேர்ந்து செடுத்து உள்ளது.
சீனாவில் உற்பத்தியாளர்கள் மீது கடுமையான தரங்களை அமல்படுத்துவது, சான்றிதழுடன், சோதனைக் கருவிகள் மற்றும் பிற உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது. சோதனை கருவிகளை ஏற்றுமதி செய்ய இப்போது அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 25-30 பேர் மட்டுமே உள்ளது.
சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஏற்றுமதிகளை ஒருங்கிணைக்கிறது, இருப்பினும் மத்திய அரசும், மாநிலங்களும் நேரடியாக அண்டை நாட்டிலுள்ள உற்பத்தியாளர்கள் அல்லது வர்த்தகர்களுக்கு சப்ளையர்கள் மூலமாக ஆர்டர்கள் கொடுப்பது அதிகரித்து உள்ளது.
Leave a Reply