கொரோனா மரபணு வரிசையை கண்டறிந்த பெண் விஞ்ஞானியை மிரட்டிய சீனா இந்த மரபணு சோதனைகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு இன்றியமையாதது ஆகும்.

பெய்ஜிங்

சீனாவின் உகான் நகரில் கடல் மாமிச உணவு விற்கும் சட்ட விரோத சந்தையிலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சீனாவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பிரிவு இயக்குநர் காவோ ஃபூ தெரிவித்திருந்தார்.கரோனா வைரஸ் விலங்கிலிருந்துதான் மனிதருக்குப் பரவியிருக்கிறது என்று பரவலாக நம்பப்படுகிறது, ஆனால் சீனா அதிகாரப்பூர்வமாக இதனை அறிவிக்கவில்லை.

சீன மக்களில் வாழ்க்கையில் விலங்குகள் மற்றும் மாமிச சந்தைகள் முக்கியமானவை ஆனால் அது தற்போது உலகம் முழுவதும் கொரோனாவாக கோரதாண்டவம் ஆடி வருகிறது.

சீனா கொரோனா வைரஸ் விவ்காரத்தில் உண்மையை மறைப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.

இந்த நிலையில் கொரோனா கிருமியின் மரபணுவை வரிசைப்படுத்தி, அதற்கான தீர்வை ஜனவரியிலேயே கண்டறிந்த ஆய்வாளரை சீனா மிரட்டி பணியவைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உகானில் வவ்வால் பெண்மணி என அறியப்படும் ஷி ஜெங்லி என்ற பிரபல வைரஸ் ஆய்வாளரே கொரோனா வைரஸ் தொடர்பில் அதன் மரபணுக்களை வரிசைப்படுத்தி, தீர்வையும் வெளியிட்டவர்.இவரே சீனாவின் வவ்வால் குகைகளில் மறைந்திருக்கும் சார்ஸ் போன்ற கொடிய வைரஸ்களை அடையாளம் கண்டவர்.

அது மட்டுமின்றி, உகான் நகரில் கொரோனா பரவிய தொடக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து அதை உறுதிப்படுத்தியும் உள்ளார்.தொடர்ந்து மூன்றே நாட்களில் அதன் மரபணுவை வரிசைப்படுத்தி, கொரோனாவுக்கான தீர்வையும் கண்டறிந்துள்ளார்.

ஆனால் சீனா நிர்வாகம் இந்த தகவலை அறிந்து, அவரை மிரட்டி தங்களுக்கு சாதகமாக அவரை பணிய வைத்துள்ளது.

ஆய்வாளர் ஷி கண்டறிந்த தகவல்களை சீனா உரிய காலத்தில் வெளிப்படுத்தியிருந்தால் கொரோனா பரவலை தடுத்திருக்க முடியும் என்பது மட்டுமின்றி, மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்.

கொரோனா அதி வேகமாக உகான் நகரில் பரவியதை அடுத்து இரண்டு மாத காலம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலகட்டத்தில் ஆய்வாளர் ஷி உடன் பத்திரிகையாளர் ஒருவர் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அவரிடமே சீன அரசாங்கத்தால் மூடி மறைக்கப்பட்ட இந்த தகவலை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.ஜனவரி 2 ஆம் தேதி ஆய்வாளர் ஷியின் ஆய்வகம் மரபணுவை வரிசைப்படுத்தியதுடன், தீர்வையும் கண்டறிந்துள்ளது. இந்த நிலையில் உகான் வைரஸ் ஆய்வகத்தின் தலைவர் யான்யி வாங், பொருத்தமற்ற மற்றும் தவறான தகவல்கள் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்துவதாகக் கூறினார்.

மட்டுமின்றி கொரோனா தொடர்புடைய மேலதிக தகவல்களை இன்னும் வெளியிட ஷி உள்ளிட்ட அவரது குழுவினருக்கு தடை விதிக்கப்பட்டது.இச்சம்பவம் நடந்த ஒரு வாரத்தில் ஷாங்காய் ஆய்வாளர்கள் குழு ஒன்று கொரோனாவுக்கான தீர்வை வெளியிட்டது.அடுத்த இரு நாட்களில் அவர்களது ஆய்வகமும் விசித்திர காரணங்களுக்காக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *