டெல்லி நிஜாமுதீன் மார்க்கஸில் இருந்து 36 மணி நேரத்தில் 2,300 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர், 617 அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் மலேசியா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் சுமார் 1,700 பேர் கலந்து கொண்டனர்.

இதில் பங்குகொண்டவர்களில் கணிசமான பேர் பின்னர் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் சென்றனர். அவர்களில் 9 பேர் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மரணம் அடைந்ததாகவும், மேலும் டெல்லியை சேர்ந்த 24 பேர் அந்த நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டம் நடந்த பகுதியில் தங்கி இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 335 பேருக்கு சளி, இருமல் இருந்ததால் அவர்கள் டெல்லியில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதற்கிடையே, கணிசமான பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் அவர்களுக்கும், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால் அப்படி வந்துள்ளவர்கள் யார்-யார்? என்பது பற்றியும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றியும் அந்தந்த மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாட்டின் முக்கிய கொரோனா ஹாட்ஸ்பாட்களில் ஒன்றாக மார்கஸ் உருவெடுத்துள்ளது.

நிஜாமுதீன் மேற்கில் உள்ள தப்லிகி ஜமாத்தின் மர்க்காஸ் அகற்றப்பட்டு 36 மணி நேரத்தில் 2,300 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று தெரிவித்தார்.

துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மேலும் கூறியதாவது:-

மார்கஸிலிருந்து 2,361 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர், அவர்களில் 617 பேர் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சிசோடியா கூறினார். மீதமுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

“இந்த 36 மணி நேர நடவடிக்கையில் மருத்துவ ஊழியர்கள், நிர்வாகம், காவல்துறை மற்றும் டிடிசி ஊழியர்கள் இணைந்து பணியாற்றி, தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வணக்கம்” என்று சிசோடியா கூறினார்.

டாக்டர் ஜீஷன், முப்தி ஷெஜாத், எம் சைஃபி, யூனஸ் மற்றும் முகமது சல்மான் ஆகியோர் மீது 1897 ஆம் ஆண்டு தொற்றுநோய்கள் சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மவுலானா சாத் இருக்கும் இடம் தெரியவில்லை அவரை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *