டெல்லியில் ஊரடங்கு தளர்வு கிடையாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று தளர்த்தப்படும் நிலையில், டெல்லியில் எந்த தளர்வும் கிடையாது என்று அந்த மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாட்டின் மக்கள் தொகையில் 2 சதவீதம் பேர் தான் டெல்லியில் வசிக்கின்றனர். ஆனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 12 சதவீதம், டெல்லியில் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்போதைக்கு ஊரடங்கில் எந்த தளர்வும் கிடையாது. வருகிற 27-ந் தேதி நடக்கும் ஆய்வுக்கூட்டத்தின்போது, அப்போதுள்ள நிலவரத்தை பொறுத்து முடிவு எடுப்போம்.

ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களை நான் அறிவேன். அதே சமயத்தில், மக்களின் உடல்நலனை கருத்திற்கொண்டு, கட்டுப்பாடுகளை தளர்த்துவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *